Hybrid Solar Eclipse:அது என்ன ஹைபிரிட் சூரிய கிரகணம்.. இந்தியாவில் இந்த நிகழ்வை இன்று காண முடியுமா?
Dec 26, 2023, 02:29 PM IST
Hybrid Solar Eclipse 2023: நூற்றாண்டுக்கு சில முறை மட்டுமே நிகழும் இந்த அரிய வகை சூரிய கிரகணமானது 'நிங்கலூ சூரிய கிரகணம்' (Ningaloo Solar Eclipse) அல்லது 'ஹைபிரிட் சூரிய கிரகணம்' (Hybrid Solar Eclipse ) என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இது வானத்தில் நிகழும் அறிவியல் நிகழ்வாகும். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 20) வானில் ஒரு அரிய வகை வானியல் நிகழ்வு ஏற்படவிருக்கிறது.
நூற்றாண்டுக்கு சில முறை மட்டுமே நிகழும் இந்த அரிய வகை சூரிய கிரகணமானது 'நிங்கலூ கிரகணம்' (Ningaloo solar eclipse) அல்லது 'ஹைபிரிட் சூரிய கிரகணம்' (Hybrid Solar Eclipse 2023) என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முழு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 7.04 மணி முதல் பிற்பகல் 12.29 மணி வரை நிகழ உள்ளது. கிட்டதட்ட 5 மணி நேரம் 24 மணி நிமிடங்கள் வரை இந்த கிரகணம் நீடிக்கிறது. இதை இந்தியாவில் எங்கும் காணமுடியாது என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு இந்தியாவில் தென்படாது என்றாலும், மற்ற நாடுகளில் உள்ள மக்கள் நேரடியாக காணலாம். நிங்கலூ கிரகணம் என்று அழைக்கப்படும் ஹைபிரிட் சூரிய கிரகணம் ஒரு அரிய கிரகண நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முழு சூரிய கிரகணத்தை ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் மட்டுமே காண முடியும் என்று வானியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் மட்டுமே இந்த கிரகணம் தெரியும். அதனால் இந்த கிரகணத்திற்கு ஆஸ்திரேலியாவின் 'நிங்கலூ'கடற்கரை பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை முழுமையாகவோ, பகுதியளவாகவோ கூட பார்க்க முடியாது. 1 நிமிடம் மட்டுமே முழு சூரிய கிரகணம் நீடிக்கும் என்றும் ஜப்பான், தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பகுதி அளவாக மட்டுமே இது தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைபிரிட் சூரிய கிரகணம் உலகின் சில பகுதிகளில் இது வளைய கிரகணமாக தோன்றும் முன், முழு கிரகணமாக மாறும் என்று கூறப்படுகிறது. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்காது, இந்த அரிய வகை கிரகணத்தின் போது, சூரியன் சில நொடிகளுக்கு ஒரு வளையம் போன்ற வடிவத்தில் காட்சி அளிக்கும். அது 'நெருப்பு வளையம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை சூரிய கிரகணம் வரும் 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி தான் நிகழ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்