தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rajasthan Results 2023: ’ராஜஸ்தானில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்! மாஸ் காட்டுகிறது பாஜக!’

Rajasthan Results 2023: ’ராஜஸ்தானில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்! மாஸ் காட்டுகிறது பாஜக!’

Kathiravan V HT Tamil

Dec 03, 2023, 09:41 AM IST

google News
”Rajasthan Assembly Election Results 2023: இதில் 101 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது, காங்கிரஸ் கட்சி 83 இடங்களிலும், பிற கட்சிகள் 15 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.”

ராஜஸ்தானில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறது.

200 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 199 சட்டமன்றத் தொகுதிகளில் 75.45% வாக்குகள் பதிவாகி இருந்தது. கரணாபூர் தொகுதியில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் குன்னார் மறைவு காரணமாக அந்த ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 1993ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தது இல்லை. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்று வந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து அசோக் கெலாட் முதலமைச்சர் ஆகி இருந்தார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பாஜக- காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி இருக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி, பாஜகவிடம் ஆட்சியை இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இந்தது. இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் தொடங்கி ராஜஸ்தானின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இதில் 101 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது, காங்கிரஸ் கட்சி 83 இடங்களிலும், பிற கட்சிகள் 15 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை