Resign: ராஜஸ்தான் முதல்வர் கெலாட், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் ராஜினாமா
Dec 03, 2023, 08:55 PM IST
அசோக் கெலாட்டும் சந்திரசேகர ராவ்வும் தனது பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
அடுத்தடுத்து ராஜஸ்தான், தெலங்கானா முதலமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
தெலங்கானா சட்டப்பேரவைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில்,ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 39 தொகுதியில் மட்டுமே முன்னிலைபெற்று பெரும்பான்மையை இழந்தது. காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மைக்குக் காரணமான 60 தொகுதிகளைத் தாண்டி, 62 தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டது. 2 தொகுதிகளில் முன்னிலையும் வகிக்கிறது. தவிர, பாஜக, 8 இடங்களில் வென்றுள்ளது. இதனால் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தனது பதவியை ராஜினாமா செய்து அக்கடிதத்தை, தெலங்கானா ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளார்.அதைத் தொடர்ந்து அக்கடிதம் டிசம்பர் 3ஆம் தேதியான இன்று பெறப்பட்டதாகவும், அக்கடிதத்தை ஆளுநர் தமிழிசை ஏற்றுக்கொண்டதாகவும், அடுத்த அரசு பதவியேற்கும்வரை பொறுப்புகளில் சந்திரசேகர் ராவ் இருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டி, தெலங்கானா ஆளுநரின் செயலர் சுரேந்திர மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கான 199 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 115 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 69 தொகுதிகளில் வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும் பிற கட்சியினர் 13 தொகுதிகளிலும் வென்றுள்ளனர். இதனால், பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் கட்சி தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு, அம்மாநில முதலமைச்சர் அஷோக் கெலாட், ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.