Rahul Gandhi: 'ராகுலின் பிடிவாதம் எரிச்சல் தருகிறது!’ சமையல் வீடியோவில் சோனியா ஜாலி டாக்!
Dec 31, 2023, 04:11 PM IST
”தனது தாய் சோனியா காந்தி உடன் சேர்ந்து சமைக்கும் வீடியோவை ராகுல் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்”
2023 ஆம் ஆண்டின் கடைசி நாளில், ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தி உடன் இணைந்து மர்மலேட் ஜாம் தயாரிக்கும் வீடியோவை யூடியூபில் வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராக உள்ள ராகுல் காந்தி எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பேசும் வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி வருகிறார். மேலும் சமையல் தொடர்பான வீடியோகளையும் இதில் இடம்பெற செய்து வருகிறார் அந்த வகையில் தனது தாய் சோனியா காந்தி உடன் இணைந்து மர்மலேட் ஜாம் தயாரிக்கும் ராகுல் காந்தி அரசியலையும் பேசி உள்ளார்.
காஸ் அடுப்பில் ஆரஞ்சு பழங்களை கிளறிவிட்டபடி பேசிய ராகுல் காந்தி, பாஜகவினருக்கு ஜாம் கொடுப்பது குறித்து பேசினார். அப்போது ”பாஜகவினர் அதை எங்கள் மீது தூக்கி எறிவார்கள்," என்று சோனியா காந்தி கேலியாக சோல ராகுல் சிரித்தார்.
ஆரஞ்சு பழங்கள் கொதித்துக் கொண்டிருந்த நிலையில், ராகுலின் பிடிவாத குணம் தன்னை மிகவும் எரிச்சலூட்டுவதாக சோனியா காந்தி கூறினார். மேலும் ராகுல் காந்தி தன் மீது மிகவும் அக்கறை உள்ளவர் என்றும் சோனியா காந்தி கூறினார்.
"இது என் சகோதரியின் செய்முறை, என்னுடையது அல்ல, அவர் செய்முறையை கண்டுபிடித்து அதை மேம்படுத்தினார். நான் அதை செயல்படுத்துகிறேன்" என்று ராகுல் காந்தி கூறினார்.
சிறிய ஆரஞ்சுப் பழங்களைப் பறித்து, அவற்றைக் கழுவி, சாறு அருந்துவதற்காகத் தாய்-மகன் இருவரும் தோட்டத்திற்குச் சென்றதில் இருந்து இந்த சமையல் செயல்முறை தொடங்கியது.
"பி.ஜே.பி.காரர்களுக்கு ஜாம் கிடைக்கணும்னா, அவங்களும் எடுத்துக் கொள்ளலாம். என்ன சொல்றீங்க மம்மி?" ராகுல் காந்தி கூறினார். அதற்கு சோனியா காந்தி, “எங்கள் மீது வீசுவார்கள். "அது நல்லது, பிறகு அதை மீண்டும் எடுக்கலாம்" என்று சொல்லி ராகுல் காந்தி சிரித்தார்.
குடும்பத்தில் சிறந்த சமையல்காரர் சோனியா காந்தி என்றும், அவர் தங்களது காஷ்மீரி உறவினர்களிடம் இருந்து பல சமையல் குறிப்புகளைக் கற்றுக்கொண்டார் என்று ராகுல் காந்தி கூறினார். “ஒரு இந்தியர் வெளிநாட்டிற்குச் சென்றால்... இன்று நான் பேசவில்லை, ஏனென்றால் எல்லா இடங்களிலும் இந்திய உணவகங்கள் உள்ளன... நீங்கள் இங்கிலாந்திலோ அல்லது வேறு இடங்களிலோ உள்ள உணவுகளை சரிசெய்ய முடியாது. அதேபோல், நான் இங்கு வந்தபோது, அட்ஜஸ்ட் செய்ய எனக்கு நேரம் பிடித்தது” என்று சோனியா காந்தி கூறினார்.
இந்திய சுவைகளுக்கு, குறிப்பாக மிளகாய் மற்றும் புதினா போன்றவற்றை ஏற்க தனக்கு நேரம் பிடித்ததாக சோனியா கூறினார்.
அந்த வீடியோவில், ராகுல் காந்தி இங்கிலாந்தில் படிக்கும் போது தனக்கு வேறு வழியில்லை என்பதால் அடிப்படை சமையலை கற்றுக் கொண்டதாக கூறினார். "ஒரு பெரிய அளவிலான அரசியல் சண்டை உணவைப் பற்றியது. காந்திஜிக்கு உணவைப் பற்றி ஒரு குறிப்பிட்ட பார்வை இருந்தது -- சைவம், ஆட்டு பால் மற்றும் அவருக்கு ஊட்டச்சத்து யோசனைகள் இருந்தன. எனக்கும் காந்திஜியின் சற்றே வித்தியாசமான ஊட்டச்சத்து யோசனைகள் உள்ளன," ராகுல் கூறினார்.