தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  2024 மக்களவைத் தேர்தலுக்கு ராகுல் புதிய வியூகம்

2024 மக்களவைத் தேர்தலுக்கு ராகுல் புதிய வியூகம்

I Jayachandran HT Tamil

Jul 17, 2022, 08:42 PM IST

google News
வரும் 2024ஆம் ஆண்டில் நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெறச் செய்வதற்காக புதிய திட்டங்களை வகுத்துள்ளார் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்.

புதுதில்லி: வரும் 2024 மக்களவை தேர்தலை சந்திக்க பல அதிரடி யான திட்டங்களை தயாரித்துள்ளது காங்கிரஸ். இதற்காக கட்சியில் பல மாற்றங்களையும், வியூகங்களையும் செய்து வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கன்னியாகுமரியிலிருந்து, காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார்.

இதே போல ஊடகங்களில், குறிப்பாக வட மாநில 'டிவி'க்களில் காங்கிரஸ் தொடர்பான செய்திகள் குறைவாகவே வெளியாகின்றன. அப்படியே வந்தாலும், அவை காங்கிரசுக்கு எதிரான செய்திகளாகவே இருக்கின்றன. எப்போதும் பாஜக, மோடி என 'டிவி'க்கள் ஆளுங்கட்சியின் புகழ் பாடுவது காங்கிரசுக்கு எரிச்சலாக இருக்கிறது. இதை போக்க ஒரு திட்டம் தயாராகி உள்ளது.

தில்லிக்கு அருகில் நொய்டாவில் உள்ள 'பிலிம் சிட்டி'யில் அனைத்து ஆங்கில மற்றும் ஹிந்தி 'டிவி'க்களின் அலுவலகங்களும் 'ஸ்டூடியோ'க்களும் உள்ளன. ஒவ்வொரு 'டிவி' அலுவலகத்திற்கும் 'விசிட்' செய்து அங்குள்ள 'சீனியர் எடிட்டர்'களை ராகுல் சந்தித்து, தங்கள் தரப்பு 'பாசிட்டிவ்' செய்திகளை வரவழைக்க பேசுவாராம். இதேபோல டில்லியில் உள்ள நாளிதழ் அலுவலகங்களுக்கும் ராகுல் செல்வார் என்கின்றனர். இதைத் தொடர்ந்து மற்ற மொழி 'டிவி' மற்றும் நாளிதழ் எடிட்டர்களையும் ராகுல் சந்திப்பாராம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி