தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Congress Bharat Jodo Yatra: கொச்சியில் ராகுல் 14வது நாள் நடைபயணம்

Congress Bharat Jodo Yatra: கொச்சியில் ராகுல் 14வது நாள் நடைபயணம்

Karthikeyan S HT Tamil

Sep 21, 2022, 10:20 AM IST

ராகுல் இன்று 14வது நாளாக கொச்சியில் இருந்து தனது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ராகுல் இன்று 14வது நாளாக கொச்சியில் இருந்து தனது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ராகுல் இன்று 14வது நாளாக கொச்சியில் இருந்து தனது நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் தனது 14வது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இன்று மேற்கொண்டுள்ளார். கடந்த 13 நாட்களில் 240 கி.மீ தூரம் அவர் பயணம் செய்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

Hemant Soren: அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Dubai weather: ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை, விமானங்கள் ரத்து.. வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி

Gujarat: ஓரினச்சேர்க்கையால் வந்த வினை.. பார்சல் அனுப்பி காதலியின் கணவர், மகளை கொன்ற பெண்! - குஜராத்தில் பயங்கரம்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வைத்து ராகுலின் நடைபயணத்தை தொடங்கிவைத்தார். 4 நாட்காளாக கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் கடந்த 11ம் தேதி முதல் கேரளாவில் நடைபயணத்தை தொடங்கினார்.

13ஆவது நாளான நேற்று அவர் கேரளத்தில் ஆலப்புலாவில் நடைபயணம் மேற்கொண்டார். ராகுல் செல்லும் வழியில் பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்து வருகிறார்.

14ஆவது நாளாக கேரளத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல், கொச்சி மாவட்டம் கும்பலம் சுங்கச்சாவடி அருகே உள்ள நாராயண குரு படத்துக்கு காலை 6.25 மணியளவில் மரியாதை செலுத்திய பிறது இன்றைய நடைபயணத்தை தொடர்ந்தார்.

 

இன்றைய யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காலை 11.30 மணிக்கு எடப்பள்ளியில் ஓய்வெடுக்கும் நடைபயண குழுவினர், மீண்டும் மாலை 5 மணிக்கு அங்கிருந்து நடைபயணத்தை தொடங்குகின்றனர். இரவு 7 மணிக்கு அலுவாவில் இன்றைய பயணத்தை முடிக்கின்றனர். கடந்த 13 நாட்களில் 240 கி.மீ தூரம் அவர் பயணம் செய்துள்ளார்.

ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணம் கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா, தில்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது. மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

டாபிக்ஸ்