Punch: ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட மனைவி.. ஒத்துழைக்காத கணவர்.. மூக்கில் சரமாரியாகக் குத்தி கொலை
Jan 06, 2024, 04:15 PM IST
மனைவியின் பிறந்த நாள் திட்டம், திருமண நாள் பரிசு தொடர்பாக தம்பதி இடையே ஏற்பட்ட தகராறு காரணாக கணவர் மனைவியால் கொலை செய்யப்பட்டார்.
மனைவியின் ஆடம்பர ஆசைகளை நிறைவேற்றாத கணவரை, மனைவி மூக்கில் சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் ரியல் எஸ்டேட் துறையில் பணிபுரிந்தவர் நிகில் கண்ணா(38). வான்வாடி பகுதியில் தனது மனைவி ரேணுகாவுடன்(36) வசித்து வந்தார். கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி ரேணுகாவுக்குப் பிறந்தநாள் வந்திருக்கிறது. அதை ரேணுகா துபாயில் கொண்டாடவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். அதற்குக் கணவர் நிகில் கண்ணா மறுப்புத்தெரிவித்திருக்கிறார். மேலும், நவம்பர் 5ஆம் தேதி அவர்களின் திருமணநாளை ஒட்டியும் கணவர் நல்ல பரிசை தரவில்லை எனக்கூறப்படுகிறது.
அதேபோல் தனது உறவினரின் பிறந்தநாளைக் கொண்டாட டெல்லி செல்ல ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கும் அவரது கணவர் நிகில் கண்ணா மறுப்புத் தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ரேணுகாவுக்கும் அவரது கணவர் நிகில் கண்ணாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின், ஆத்திரத்தில் அந்தப் பெண் தனது கணவரின் மூக்கில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், அதிக ரத்தப்போக்குடன், சுயநினைவை இழந்து நிகில் கண்ணா மயங்கினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் போலீசாரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.
அவர்கள் அந்த நபரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே நிகில் கண்ணா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கணவனை அடிக்க பெண் கூர்மையான பொருளைப் பயன்படுத்தினாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனையில் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் எனத் தெரிகிறது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட ரேணுகா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்