தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Puducherry: பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து ஊழியர்கள் தற்கொலை முயற்சி - புதுச்சேரியில் பரபரப்பு!

Puducherry: பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து ஊழியர்கள் தற்கொலை முயற்சி - புதுச்சேரியில் பரபரப்பு!

Karthikeyan S HT Tamil

Apr 28, 2023, 06:14 PM IST

google News
puducherry: போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அமுதசுரபி ஊழியர்கள் திடீரென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
puducherry: போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அமுதசுரபி ஊழியர்கள் திடீரென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

puducherry: போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அமுதசுரபி ஊழியர்கள் திடீரென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அமுத சுரபி அங்காடியில் சுமார் 30 மாதங்களாக சம்பளம் தரவில்லை. இதனால் ஊதியம் தரக் கோரியும், பணிதரக் கோரியும் கூட்டுறவுத்துறையை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தியும் அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் காந்தி வீதியிலுள்ள அமுதசுரபி தலைமை அலுவலக வாயிலில் அமர்ந்து ஊழியர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலுவையில் உள்ள 30 மாதம் சம்பளத்தை வழங்க கோரிக்கை விடுத்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் 7 அமுதசுரபி ஊழியர்கள் திடீரென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதையடுத்து பாதுகாப்பில் இருந்த போலீசார் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த சிவா, குமரன், அய்யனார், முருகன், மணிமாறன், சிவஞானம் உட்பட 7 பேரை போலீசார் மீட்டு ஆம்புன்ல்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலரும் விஷம் குடிப்பதாக தெரிவித்து பாட்டிலை எடுக்க போலீஸார் அதை போராடி பறிமுதல் செய்யத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதனிடையே அரசு பொது மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்குப் பிறகு உடல் நிலை அதிகளவில் பாதிப்பில் இருந்த சிவஞானம், குமரன், அய்யனார், மணிமாறன் ஆகியோர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவமனைக்கு நேரில் சென்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தொழிலாளிகள் முதல்வரை சந்தித்தால், அவர்களை திட்டி அனுப்புகிறார். இன்று நடந்தது சோக சம்பவம். அரசு தொழிலாளர்களை தற்கொலைக்கு தள்ளுகிறது. முழு பொறுப்பை முதல்வரும், தலைமைப் பொறுப்பாளரும் ஏற்க வேண்டும். " என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி