PSLV C56: 7 செயற்கை கோள்களை ஏவும் திட்டம் வெற்றி -இஸ்ரோ
Jul 30, 2023, 09:21 AM IST
திட்டப்படி 7செயற்கை கோள்களும் அதன் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி – சி56 ராக்கெட் இன்று காலை 6.31 மணியளவில் விண்ணில் ஏவப்பட்ட நிலையில் 7 செயற்கை கோள்களை ஏவும் திட்டம் வெற்றி அடைந்துள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது. திட்டப்படி 7செயற்கை கோள்களும் அதன் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
வணிகப்பயன்பாட்டிற்காக ஏழு சிங்கப்பூர் சாட்டிலைட்டுகளுடன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று (30.07.2023) பிஎஸ்எல்வி சி 56 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இது டிஎஸ் – சார் மிஷன் என்றும் அழைக்கப்படுகிறது. போலார் சாட்டிலை லாஞ்ச் வெகிகிளின் இந்தாண்டின் இரண்டாவது திட்டம். ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 56 முதல் ஏவுதளத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த திட்டம், நியூ ஸ்பேஸ் இந்தியாவுடன் இணைந்து ஏவுகிறது. பிஸ்எல்வி-சி56 இஸ்ரோவின் 90வது விண்வெளி திட்டமாகும்.
டிஎஸ் – சார், 360 கிலோகிராம் எடைகொண்ட சாட்டிலைட், ராணுவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்துடன் (டிஎஸ்டிஏ) சேர்ந்து உருவாக்கியது. இம்மையம் சிங்கப்பூர் அரசின் கீழ் செயல்படும் மையமாகும் மற்றும் எஸ்டி இன்ஜினியரிங் என்ற சிங்கப்பூரின் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப குழுவாகும்.
பிஎஸ்எல்வி சி56வுடன், Velox-AM, ARCADE, SCOOB-II, NuLIoN, Galassia-2, and ORB-12 Strider ஆகிய சாட்டிலைட்கள் பயணிக்கின்றன. ஆர்கேட் என்றால், அட்மாஸ்ஃபெரிக் கப்ளிங் மற்றும் டைனாமிக்ஸ் எக்ஸ்ப்ளோரர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலாக்ஸ், ஆர்கேட் மற்றும் ஸ்கூப் – 2 சிங்கப்பூர் நயாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது. நியூலன் நியூஸ்பேஸ் என்ற சிங்கப்பூரின் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரின் காலாசியா – 2 என்பது சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டது. ஓஆர்பி – 12 ஸ்ரைடர், சிங்கப்பூரின் ஸ்பேஸ் டெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
இதில், சிங்கப்பூரின் 7 செயற்கைகோள்களில், அரியலூர் மாவட்டம் ஐயப்பன்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் செல்லத்துரை வடிவமைத்த 3 நானோ செயற்கை கோள்களும் செலுத்தப்படவுள்ளன.
பிஎஸ்எல்வி-சி56, டிஎஸ்-சார் பூமத்திய ரேகை சுற்றுவட்டப்பாதைக்கு அருகில் 535கி.மீட்டர் உயரத்தில் 5 டிகிரி சாய்வாக நிலை நிறுத்தும். டிஎஸ்-சாரில் சின்தட்டிக் அப்பர்ச்சர் ராடார் சுமை, இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
சின்தட்டிக் அப்ர்சர் ரேடாரின் பணிகள், முழுநாளும் வானிலையை ஆய்வு செய்யும். படங்கள் பிடிக்கும். இந்த சாட்டிலைட் படங்கள் சிங்கப்பூர் அரசின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும். இதற்கிடையில், எஸ்டி இன்ஜினியரிங் டிஎஸ்-சார் சாட்லைட்டை வணிக ரீதியிலான வாடிக்கையாளர்களுக்கும் உபயோகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்