தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Prince Harry: மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியமுடன் இருந்த பகை - மனம் திறந்த பிரிட்டன் இளவரசர் ஹாரி

Prince Harry: மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியமுடன் இருந்த பகை - மனம் திறந்த பிரிட்டன் இளவரசர் ஹாரி

Marimuthu M HT Tamil

Jan 08, 2024, 11:05 AM IST

google News
நல்லிணக்கத்திற்கான விருப்பத்தை இளவரசர் ஹாரி வெளிப்படுத்திய போதிலும், ஹாரியின் தந்தை மற்றும் சகோதரனுடனான உறவுகள் முறிந்தே உள்ளன. (AP)
நல்லிணக்கத்திற்கான விருப்பத்தை இளவரசர் ஹாரி வெளிப்படுத்திய போதிலும், ஹாரியின் தந்தை மற்றும் சகோதரனுடனான உறவுகள் முறிந்தே உள்ளன.

நல்லிணக்கத்திற்கான விருப்பத்தை இளவரசர் ஹாரி வெளிப்படுத்திய போதிலும், ஹாரியின் தந்தை மற்றும் சகோதரனுடனான உறவுகள் முறிந்தே உள்ளன.

பிரிட்டனின் பிரமாண்ட அரச குடும்பத்து வாரிசு, இளவரசர் ஹாரி. இவர் மேகன் மார்க்லே என்னும் பாலிவுட் நடிகையைத் திருமணம் செய்துகொண்டு, அரச குடும்பத்தின் கடமைகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழத்தொடங்கினார். 

இளவரசர் ஹாரியின் சகோதரர் வில்லியம் மற்றும் அவரது தந்தை மன்னர் சார்லஸ் ஆகியோர் தனது மகனான இளவரசர் ஹாரியுடன் நெருக்கம் காட்டவிரும்பவில்லை. ஆனால், இளவரசர் ஹாரி மீண்டும் இணைவது குறித்த சமிக்கைகளை வெளிப்படுத்தினார். 

முன்னதாக ஹாரிக்கும் அவரது சகோதரர் இளவரசர் வில்லியமுக்கும் இடையில் உடல் ரீதியான தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து, தி டெலிகிராப் பத்திரிகைக்கு இளவரசர் ஹாரி அளித்த பேட்டியில், "சில விஷயங்கள் நடந்துள்ளன. குறிப்பாக எனக்கும் என் சகோதரனுக்கும், எனக்கும் என் தந்தைக்கும் இடையே சில விஷயங்கள் நடந்துள்ளன. அதை உலகம் அறியவேண்டாம். அவர்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நினைக்கவேண்டாம்" என்றார்.

இந்த ரகசிய அறிக்கையானது ஹாரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இடையே தீர்க்கப்படாத பிரச்னைகளின் அளவைப் பற்றி பொதுமக்களை யூகிக்க வைத்துள்ளது. ஹாரி மற்றும் வில்லியம் இடையே உள்ள இறுக்கமான உறவு ரகசியமாக இல்லை என்றாலும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஆழமான, வெளிப்படுத்தப்படாத போராட்டங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது.

தொடர்ச்சியான பதற்றங்கள் இருந்தபோதிலும், இளவரசர் ஹாரி தனது தந்தை மன்னர் சார்லஸை ஆதரிப்பதற்காக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் சார்லஸ் தனது பொது உரைகளில் ஹாரி, மேகன் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு அன்பான வாழ்த்துகளை அனுப்பினார்.

எவ்வாறாயினும், இளவரசர் வில்லியம் மற்றும் மன்னர் சார்லஸ் ஆகியோர் ஹாரியுடன் தங்கள் பிணைப்பை சரிசெய்வதற்கான முதல் படிகளைத் தொடங்க விரும்பவில்லை என்பதால், நல்லிணக்கம் நிகழ வாய்ப்பில்லை. ஒரு குடும்பமாக ஒன்றாக தரமான நேரத்தைச் செலவிடுவது ஒருபுறம் இருக்க, மூவரும் இயல்பான தகவல்தொடர்புகளை மீட்டெடுக்க பல ஆண்டுகள் ஆகலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி