தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Republic Day 2023: தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி! சிலிர்க்க வைக்கும் அணிவகுப்பு

Republic Day 2023: தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி! சிலிர்க்க வைக்கும் அணிவகுப்பு

Manigandan K T HT Tamil

Jan 26, 2023, 11:01 AM IST

google News
President Droupadi Murmu: 74வது குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.

அதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகளின் சிலிர்க்க வைக்கும் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் குடியரசு தினத்தில் பங்கேற்றுள்ளனர்.

தலைமை விருந்தினரான எகிப்து அதிபர் அல் சிசியும் பங்கேற்றார். அவரையும் குடியரசுத் தலைவரையும் பிரதமர் மோடி வரவேற்றார்.

குடியரசு தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடும் பனியையும் பொருட்படுத்தாமல் தேசப்பற்றுடன் பொதுமக்களும் குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்று அணிவகுப்புகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி

தேசியக் கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து மரபுப் படி, 21 துப்பாக்கிகள் கொண்டு வீரர்கள் வணக்கம் செலுத்தினர். தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

பல முதன்மையானவற்றில், சம்பிரதாய வணக்கம் 105-மிமீ இந்திய பீல்ட் கன்களால் வழங்கப்பட்டது. இது பழங்கால 25-பவுண்டர் துப்பாக்கிகளுக்கு பதிலாக இந்த முறை மாற்றப்பட்டது. 

முன்னதாக, குடியரசு தினத்தையொட்டி, அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியவர்களை நினைவுகூரும் நாள் இன்று என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து கூறினார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி