அர்ஜென்டினாவுக்கு படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள்-காரணம் என்ன?
Feb 13, 2023, 09:32 AM IST
Argentina: 71 நாடுகளுக்கு விசா இல்லாமல் அர்ஜென்டினா பாஸ்போர்ட் மூலம் செல்ல முடியும் என்பதாலும் ரஷ்ய கர்ப்பிணிகள் அதிக அளவில் அர்ஜென்டினாவுக்கு வந்து குழந்தை பெற்றுக் கொள்வதாக அர்ஜென்டினா அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவில் இருந்து அர்ஜென்டினாவுக்கு கர்ப்பிணிகள் அதிக அளவில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அர்ஜென்டினாவில் குடியுரிமை பெறுவதற்காக இதுபோன்று அதிக எண்ணிக்கையில் வருகிறார்களா என்ற கோணத்திலும் அர்ஜென்டினா குடிவரவு அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்துள்ளது. இதன்காரணமாக குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி ரஷ்ய கர்ப்பிணிகள் அர்ஜென்டினாவுக்கு படையெடுக்க காரணமாக இருக்காலம் என்று அர்ஜென்டினா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அர்ஜென்டினாவின் குடிவரவு அலுவலக இயக்குனர் ஃப்ளோரென்சியா கரிக்னானோ, ரஷ்ய பெற்றோருக்கு அர்ஜென்டினா கடவுச்சீட்டுக்கான உத்தரவாதத்தை உள்ளடக்கிய இந்த "லாபகரமான வணிகம்" குறித்து அந்நாடு நீதித்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று கூறினார்.
அர்ஜென்டினா, ரஷ்ய குடும்பங்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு இரட்டை குடியுரிமைக்கான சலுகைகளை வழங்குவதற்கான ஒரு பிரபலமான இடமாக உருவெடுத்துள்ளது.
கடந்த ஆண்டில் 10,500 கர்ப்பிணி ரஷ்யர்கள் ஆம்ஸ்டர்டாம் வந்தனர். "கடந்த மூன்று மாதங்களில் அவர்களில் 5,800 பேர் கர்ப்பத்தின் 33வது அல்லது 34வது வாரத்தில் இருந்தனர் என அர்ஜென்டினா அதிகாரிகள் தெரிவித்தனர்.
171 நாடுகளுக்கு விசா இல்லாமல் அர்ஜென்டினா பாஸ்போர்ட் மூலம் செல்ல முடியும் என்பதாலும் ரஷ்ய கர்ப்பிணிகள் அதிக அளவில் அர்ஜென்டினாவுக்கு வந்து குழந்தை பெற்றுக் கொள்வதாக அர்ஜென்டினா அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாபிக்ஸ்