தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rahul Gandhi Vs Modi: “எங்கும் ரத்தம், எங்கும் கொலை; மணிப்பூருக்கு வெறும் 2 நிமிடம்தானா” - நெருப்பை கக்கிய ராகுல்!

Rahul Gandhi vs Modi: “எங்கும் ரத்தம், எங்கும் கொலை; மணிப்பூருக்கு வெறும் 2 நிமிடம்தானா” - நெருப்பை கக்கிய ராகுல்!

Aug 12, 2023, 07:48 PM IST

google News
கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி எம்.பி பேசி வருகிறார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி எம்.பி பேசி வருகிறார்.

கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி எம்.பி பேசி வருகிறார்.

 அவர் பேசும் போது "எங்கும் ரத்தம், எங்கும் கொலை, எங்கும் பலாத்காரம் அதுதான் மணிப்பூரில் உள்ள நிலை. நாடளுமன்றத்தில் பிரதமர் மோடி 2 மணி நேரம் 13 நிமிடங்கள் உரையாற்றினார். அதில் அவர் மணிப்பூர் தொடர்பாக வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார். அவர் சிரித்தார், கேலி செய்தார். 

அவரது அமைச்சரவை சிரித்தது, கேலி செய்தது. பிரதமர் பாரத மாதா கொலை செய்யப்பட்டது குறித்து 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார். உங்களுக்கு எவ்வளவு தைரியம்..? இந்தியாவின் எண்ணத்தை நீங்கள் எப்படி அவமதிக்கலாம்? நீங்கள் ஏன் அங்கு இல்லை..? நீங்கள் ஏன் அங்கு நடக்கும் வன்முறையை தடுக்க முயற்சி செய்யவில்லை. காரணம் என்னவென்றால் நீங்கள் ஒரு தேசியவாதி இல்லை.

குடும்பங்களை அழிப்பதே பாஜகவின் நோக்கம். இந்தியா ஒரு குடும்பம், அதை அவர்கள் பிளவுபடுத்த விரும்புகிறார்கள். மணிப்பூர் ஒரு குடும்பமாக இருந்தது, அதை அழிக்க முயற்சித்தார்கள். மக்களிடையே உள்ள உறவை அழித்தார்கள்.

ஆனால் நாங்கள் உருவாக்குகிறோம், மக்களை ஒன்றிணைக்கிறோம், குடும்பங்களை பலப்படுத்துகிறோம். பாஜக நினைக்கிறது. மணிப்பூரைப் பிரித்து அழித்தோம் என்று. மணிப்பூரை மீண்டும் ஒன்று சேர்ப்போம்.

மணிப்பூருக்கு அன்பை மீண்டும் கொண்டு வருவோம். மணிப்பூரை எரிக்க உங்களுக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டது. மணிப்பூரில் மீண்டும் அன்பை கொண்டுவர எங்களுக்கு ஐந்து வருடங்கள் ஆகலாம்; ஆனால் நாங்கள் அதைச் செய்வோம். இது பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான சண்டை” என்று பேசினார். 

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி