pension slip sbi whatsapp: பென்சன் ஸ்லிப்களை வாட்ஸ்அப்பில் பெறும் வசதி அறிமுகம்
Nov 18, 2022, 01:20 PM IST
ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் பென்சன் ஸ்லிப்களை வாட்ஸ்அப் சேவை மூலம் எளிதாக பெறும் விதமாக எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய சேவை மூலம் பென்சன் சீட்டுக்களை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் யாரும் எஸ்பிஐ வங்கி கிளைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தங்களது மொபைலில் 9022690226 என்ற எண்ணை சேமித்து, அந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் 'Hi' என மெசேஜ் அனுப்பவும்.
இதையடுத்து ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகள் அனைத்தும் தோன்றும். இதன்மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களது பென்சன் சீட்டை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் கணக்கில் உள்ள பேலன்ஸ், பரிமற்றங்கள் பற்றிய தகவலை பெறலாம்.வங்கி கணக்குக்கான மினி ஸ்டேட்மெண்ட் போன்றவற்றையும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த சேவையின் மூலம் வங்கி கணக்குக்கான நாமினியையும் ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு https://www.onlinesbi.sbi/ இணையதளத்துக்கு செல்லவும்.
அதில், Requests & Enquiries என்பதை கிளிக் செய்து, பின்னர் Online Nomination என்பதை தேர்வு செய்யவும்.
இதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் உங்கள் வங்கி கணக்கு எண் உள்பட தகவல்களை உள்ளீடு செய்து, நாமினி பற்றிய விவரங்களை பதிவு செய்யலாம்.
வங்கிகளுக்கு நேரடியாக சென்று மேற்கொள்ளும் பணிகளை தவிர்க்கும் பொருட்டும், ஓய்வூதியதாரர்களின் சிரமங்களை குறைக்கும் விதமாகவும், இ-பேங்கிங் சேவையில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.