Relationship: நோயாளியுடன் உல்லாசமாக இருந்த நர்ஸ் - பாலியல் உறவில் உயிரிழந்த நோயாளி!
Jul 11, 2023, 10:07 PM IST
நோயாளியுடன் நர்ஸ் ஒருவர் ரகசியமாக பாலியல் உறவிலிருந்த போது நோயாளி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இங்கிலாந்து நாட்டில் மருத்துவமனையில் வேலை செய்யும் நர்ஸ் ஒருவர் அங்கு வந்த நோயாளியுடன் ரகசிய உறவில் இருந்து வந்துள்ளார். காரில் அவருடன் பாலியல் உறவில் இருந்த போது நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் வேல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் 42 வயதான பெனலோப் வில்லியம்ஸ் என்ற பெண் நர்ஸ்சாக வேலை செய்து வந்தார். மருத்துவமனை என்றால் நோயாளிகள் வருவது வழக்கம்தான்.
இந்த பெனலோப் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவருடன் ரகசிய பாலியல் உறவில் இருந்து வந்துள்ளார். அடிக்கடி இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனைக்குப் பின்புறம் கார் செட் இருந்துள்ளது. அங்கு இருந்த ஒரு காரில் இருவரும் பாலியல் உறவு ஈடுபட்டுள்ளனர். அப்போது பாலியல் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுதே நோயாளி உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து நர்ஸ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நர்ஸ் பெனலோப் வில்லியம்ஸ் அந்த நோயாளியுடன் பாலியல் உறவுகள் இருக்கும் பொழுது அவருடைய இதயம் செயலிழந்து விட்டது. அரை நிர்வாண கோலத்திலேயே மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தபோது, நர்ஸ் பெனலோப் வில்லியம்ஸோடு பணிபுரியும் சக நர்ஸ் ஒருவர், நோயாளியோடு பாலியல் உறவில் இருப்பது குறித்து பலமுறை எச்சரித்ததாகவும். அதனை அவர் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் செவிலியர் தொழிலுக்கு உண்டான மாண்பு சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காகவும், பெனலோப் வில்லியம்ஸ் தவறான செய்கையில் ஈடுபட்டதற்காகவும் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
நர்ஸ் ஒருவர் நோயாளியுடன் பாலியல் உணர்வில் ஈடுபட்டு உறவின் போது நோயாளி இறந்த சம்பவம் அந்த நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்