Patanjali: 263 கோடிப்பு…! அதிரடியாக உயர்ந்த பதஞ்சலி நிறுவனத்தின் லாபம்! என்ன காரணம் தெரியுமா?
May 30, 2023, 09:02 PM IST
பதஞ்சலி ஃபுட்ஸ் கடந்த நிதியாண்டில் 530.80 கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகத்தை எட்டியுள்ளது
உணவுப்பொருள் விற்பனை மற்றும் சமையல் எண்ணெய் மற்றும் வணிகங்களில் ஈடுபட்டுள்ள FMCG நிறுவனமான பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட்டின் காலாண்டு லாபம் 12 சதவீதம் அதிகரித்து ரூ.263.7 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் அந்த நிறுவனத்தின் லாபம் 234.43 கோடியாக இருந்தது.
பிரபல சாமியாரும் யோகா மாஸ்டருமான பாபா ராம்தேவின் பதஞ்சலி புட்ஸ் நிறுவனம் ஆயுர்வேதம் சார்ந்த பொருட்கள் மற்றும் ஆர்க்கானிக் உணவுப்பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் மொத்த வருமானம் 7,962.95 கோடி ரூபாயாம் உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 6,676.19 கோடி ரூபாயாக இருந்தது.
2022-23 நிதியாண்டில், நிகர லாபம் முந்தைய நிதியாண்டில் 806.30 கோடியில் இருந்து ரூ.886.44 கோடியாக உயர்ந்துள்ளது.
2021-22ஆம் ஆண்டில் 24,284.38 கோடி ரூபாயாக இருந்த அதன் மொத்த வருமானம் கடந்த நிதியாண்டில் 31,821.45 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த வருவாயில் FMCG வணிகத்தின் பங்கு, நிதியாண்டு 22இல் 1,683.24 கோடியில் இருந்து 6,218.08 கோடி ரூபாயாக அதிவேகமாக வளர்ந்ததாக பதஞ்சலி ஃபுட்ஸ் தெரிவித்துள்ளது.
"நிறுவனம் சமையல் எண்ணெய் வணிகத்தில் குவாண்டம் வளர்ச்சியை 21 சதவீதம் அதிகரித்து 1.91 மில்லியன் டன்னாக அளவு அடிப்படையில் அடைந்துள்ளது மற்றும் 1.63 மில்லியன் டன்களுக்கு எதிராக ரூ. 25,634.45 கோடி வருவாயையும் 22,882.76 கோடி வருவாய் ஈட்டியுள்ளது" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதஞ்சலி ஃபுட்ஸ் கடந்த நிதியாண்டில் 530.80 கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகத்தை எட்டியுள்ளது. இந்நிறுவனம் வடகிழக்கில் உள்ள அசாம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மற்றும் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
டாபிக்ஸ்