ஸ்காட்லாந்தில் வேலை! ஒரு நாளுக்கு ரூ. 36 ஆயிரம் சம்பளம்! ஆனால் கடல்ல இறங்கி...
Feb 21, 2023, 04:37 PM IST
நல்ல சம்பளம், கவர்ச்சிகரமான சலுகைகள், வேலை பாதுகாப்புடன் பணி அமைய வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாகவே உள்ளது. இவை அனைத்தும் நிறைந்த வேலை ஒன்றுக்கு யாருக்கும் இதுவரை விண்ணபிக்காமல் இருப்பது வியப்பை ஆழ்த்தியுள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டின் அபெர்டீன் கடற்கரை அருகே அமைந்துள்ள நார்த் கடலில் ஆஃஷோர் ரிக்கர் பணிக்கான மாதத்துக்கு ரூ. 4 லட்சம் சம்பளமும், விடுமுறை பேக்கேஜாக நாளொன்றுக்கு ரூ. 3, 877 உடன், ஒரு வாரம் வரையிலான உடல் நலம் கவரேஜும் வழங்குவதாக பிரபல நிறுவனம் ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
ஆப்ஷோர் ரிக் பணியானது நீருக்குள் கிணறுகளை தோண்டி, எண்ணெய் மற்றும் வாயுக்களை பிரித்தெடுத்து, அதை நிலத்துக்கு கொண்டு செல்வதற்கு வரை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் பணியாக உள்ளது.
இந்த பணிக்காக எடுக்கப்பட்டவர் ஆறு மாதம் காலம் வரை கடலுக்குள் பணிக்கு அனுப்பபடுவார்கள். இதற்காக அந்த நபருக்கு நாளொன்றுக்கு ரூ. 36 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. 12 மணி நேரம் வரை பணி இருக்கும் நிலையில், பணியில் சேர்ந்த நபர் 2 ஆண்டுக காலம், அதாவது இரண்டு முறை 6-6 மாதங்கள் ஷிப்ட்களை முடித்துவிட்டால் ரூ. 1 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இப்படியொரு நினைத்து பார்க்காத சம்பளத்துடன் வேலையை தரும் நிறுவனத்தின் பெயர் தெரியவில்லை என்றாலும், இந்த வேலை தொடர்பான விளம்பரத்தில் உலகளாவிய ஆற்றல் பொருள்கள் தொடர்பான சந்தையில் முன்னணி நிறுவனம் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு சலுகையாக இருந்தாலும் கண்ணுக்கு தெரியாமல் நிபந்தனைக்கு உட்பட்டது என்கிற சொல் சிறிதாக இருப்பது போல் இந்த பணிக்கு வருபவர்களுக்கும் சில நிபந்தனைகள் உள்ளது. அதில் மிக முக்கியமான நிபந்தனையானது இந்த பணி அனைவருக்குமானது கிடையாது. பணியில் சேர்பவர் அடிப்படை ஆப்ஷோர் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதுதவிர ஆப்ஷோர் தொடர்பான மேலும் சில பயிற்சிகள், மருத்துவ பயிற்சிகளும் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கிடையே இந்த வேலை தொடர்பான பதிவு பகிர்ந்து 24 நாள்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை யாரும் விண்ணப்பிக்காமல் இருப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எந்தவொரு வேலையாக இருந்தாலும் தகுதி இருக்கோ இல்லையோ, முண்டியடித்துக்கொண்டு பலரும் வேலைக்கு விண்ணப்பிப்பதையே ஒரு வேலையாக வைத்திருக்கும் நிலையில், அதுபோன்ற நபர் கூட இந்த வேலைக்கு விண்ணப்பிக்காமல் இருப்பது ஆச்சர்யமான விஷயமாகவே அமைந்துள்ளது.
விஜய்காந்தின் சேதுபதி ஐபிஎஸ் படத்தில் சமையல்காரன் கவுண்டமணிக்கு கப்பலுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக சொல்லவார் செந்தில், இதை நம்பி சமையல்காரன் வேலையை விட்டு வரும் கவுண்டமணியிடம் கடல்ல இறங்கி கப்பலை தள்ள வேண்டும் என்று சொல்லி பின் வழக்கம்போல் கவுண்டரிடம் வாங்கி கட்டி கொள்வோர்.
அந்த வகையில் மேற்கூறிய பணியை பார்க்கும்போது அந்த காமெடிதான் நினைவுக்கு வருகிறது.
டாபிக்ஸ்