தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ஒடிசாவில் ரேஷன் பயனாளிகளுக்கு 2 கோடி சணல் பைகள் வழங்க முடிவு

ஒடிசாவில் ரேஷன் பயனாளிகளுக்கு 2 கோடி சணல் பைகள் வழங்க முடிவு

Marimuthu M HT Tamil

Dec 31, 2023, 03:11 PM IST

google News
ஒடிசா மாநில உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத் துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் வெவ்வேறு அளவுகளில் 2 பைகள் கிடைக்கும் என்றும்; இதனால் அவர்கள் அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும், பிளாஸ்டிக் பைகளை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் முடியும் என்றார். ((Representative Image))
ஒடிசா மாநில உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத் துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் வெவ்வேறு அளவுகளில் 2 பைகள் கிடைக்கும் என்றும்; இதனால் அவர்கள் அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும், பிளாஸ்டிக் பைகளை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் முடியும் என்றார்.

ஒடிசா மாநில உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத் துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் வெவ்வேறு அளவுகளில் 2 பைகள் கிடைக்கும் என்றும்; இதனால் அவர்கள் அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும், பிளாஸ்டிக் பைகளை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் முடியும் என்றார்.

ஒடிசாவில் அபாயகரமான பிளாஸ்டிக் பைகளில் இருந்து மக்களை விலக்கி வைக்கும் நடவடிக்கையாக, ரேஷன் கடையின் (பி.டி.எஸ்) கீழ், உணவு தானியங்களைப் பெறும் 96 லட்சம் பயனாளிகளுக்கு விநியோகிக்க சுமார் 2 கோடி சணல் பைகளை வாங்க ஒடிசா அரசு டெண்டர் வழங்கியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (என்.எஃப்.எஸ்.ஏ) மற்றும் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஆதரவு (எஸ்.எஃப்.எஸ்.ஏ) திட்டங்களின் மூலம் பயன்பெறும் 96 லட்சம் ரேஷன் பயனாளிகளுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள, உணவு தானியங்களை எடுத்துச் செல்லும் சணல் பைகளைப் பயன்படுத்த டெண்டர் கொடுத்துள்ளனர். 

இதுகுறித்து, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘’அடுத்த ஒரு மாதத்தில், ஒவ்வொரு ரேஷன் பயனாளிகளுக்கும், வெவ்வேறு அளவுகளில், 2 பைகள் வழங்கப்படும்’’ என்றார்.

மேலும், "சணல் ஒரு இயற்கையான, மட்கும் தன்மைகொண்டது. இந்த நடவடிக்கை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும். பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உலகளாவிய பிரச்னைகளாகும். அவை நமது சுற்றுச்சூழலுக்கும் வாழ்விடத்திற்கும் ஆபத்தை விளைவிக்கின்றன. எனவே, இந்த சணல் பைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன" என்று உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத் துறையின் சிறப்புச் செயலாளர் எம்.ஏ.ஹக் தெரிவித்தார்.

சணல் பைகள் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை என்பதால் அவற்றை வழக்கமான ஷாப்பிங் தேவைகளுக்கு மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஒடிசாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக மத்திய பொதுத்துறை நிறுவனம், இதுபோன்ற 10,000 சணல் பைகளை வாங்கியிருந்தாலும், தற்போதைய ஒடிசா டெண்டர் எண்ணிக்கையிலும் மதிப்பிலும் அதிகமாக உள்ளது.

ஒடிசா 2021 செப்டம்பரில் 75 மைக்ரானுக்கும் குறைவான பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்த போதிலும், பின்னர் அதை 120 மைக்ரானுக்கு குறைவான பைகள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய டிஸ்போசபிள் பைகள், இனிப்பு பெட்டிகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், பாலிஸ்டைரீன் ஆகியவற்றை கடந்த ஆண்டு டிசம்பர் முதல் விரிவுபடுத்திய போதிலும், நிலைமை மோசமடைந்துள்ளது. ஒடிசா மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, 2022-23ஆம் ஆண்டில் மாநிலம் ஒரு நாளைக்கு 134.75 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கியது. ஆனால், அதே நேரத்தில் 37.184 டன் பிளாஸ்டிக்கை பதப்படுத்த முடியும்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெயகிருஷ்ண பானிகிரஹி கூறுகையில், பிளாஸ்டிக் மட்காதவை என்பதால் அவை மண்ணின் வளத்தை குறைத்து சுற்றுச்சூழல் அமைப்பை அச்சுறுத்துகின்றன. அவற்றில் சில புற்றுநோயை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார்.

சணல் பைகளின் பயன்பாட்டை வரவேற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் பிஸ்வஜித் மொஹந்தி, ’’ஒடிசாவின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் அதிகமுள்ளன. எனவே, அவற்றின் உற்பத்திக்கு அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் ஒடிசா மாநில அரசு தோல்வி அடைந்துள்ளது. வெறுமனே மக்களுக்கு இலவச சணல் பைகளை வழங்குவதன் மூலம் பிளாஸ்டிக் மாசுபாடு பிரச்னையைத் தீர்க்க முடியாது, "என்று அவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி