தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  புதுமண தம்பதிகளுக்கு கருத்தடை மாத்திரை, ஆணுறை வழங்கும் ஒடிசா அரசு!

புதுமண தம்பதிகளுக்கு கருத்தடை மாத்திரை, ஆணுறை வழங்கும் ஒடிசா அரசு!

Karthikeyan S HT Tamil

Aug 14, 2022, 02:06 PM IST

google News
கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் உள்ளிட்ட பரிசுத் தொகுப்பை புதுமண தம்பதிகளுக்கு பரிசாக வழங்க ஒடிசா அரசு முடிவு செய்திருக்கிறது.
கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் உள்ளிட்ட பரிசுத் தொகுப்பை புதுமண தம்பதிகளுக்கு பரிசாக வழங்க ஒடிசா அரசு முடிவு செய்திருக்கிறது.

கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் உள்ளிட்ட பரிசுத் தொகுப்பை புதுமண தம்பதிகளுக்கு பரிசாக வழங்க ஒடிசா அரசு முடிவு செய்திருக்கிறது.

புவனேஷ்வர்: நயி பாஹல் அல்லது நபாதம்பதி என்ற பெயரில் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் அடங்கிய பரிசுத் தொகுப்பு ஒன்று புதுமண தம்பதிகளுக்கு வழங்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக நயி பாஹல் அல்லது நபாதம்பதி என்ற பேரிலான பரிசு தொகுப்பை புதுமண தம்பதிகளுக்கு வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, அந்த தொகுப்பில், ஆணுறைகள், கருத்தடை மருந்துகள், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் ஒரு குழந்தைக்கும், அடுத்த குழந்தை பெற்றுக்கொள்வதற்கான இடைவெளி குறித்த விழிப்புணர்வு புத்தகம், திருமண பதிவு சான்றிதழ் ஆகியவை அடங்கி இருக்கும். குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொள்ள நினைக்கும் தம்பதிகளுக்கு ஆஷா பணியாளர்கள் மூலம் இந்த தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

மேலும், இரண்டு துண்டுகள், ஒரு நெயில்கட்டர், கண்ணாடி, சீப்பு, கைக்குட்டை உள்ளிட்டவையும் ஒவ்வொரு தொகுப்பிலும் இணைத்து வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

இது குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் பிஜய் பானிக்ராஹி கூறுகையில், மாநிலத்தில் குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதுமண தம்பதிகளுக்கு இந்த தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்றும் இந்த திட்டம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களிலும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி