தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Exit Poll: வடகிழக்கு மாநில தேர்தல் – கருத்துகணிப்புகள் என்ன கூறுகிறது?

Exit Poll: வடகிழக்கு மாநில தேர்தல் – கருத்துகணிப்புகள் என்ன கூறுகிறது?

Priyadarshini R HT Tamil

Feb 28, 2023, 06:43 AM IST

google News
Assembly Elections 2023: மேகாலயாவில் தொங்கு சட்டமன்றமும், திரிபுரா, நாகாலந்தில் பாஜக முன்னிலையில் உள்ளது என்றும் கருத்துக்கணிப்பு விவரங்கள் கூறுகின்றன.
Assembly Elections 2023: மேகாலயாவில் தொங்கு சட்டமன்றமும், திரிபுரா, நாகாலந்தில் பாஜக முன்னிலையில் உள்ளது என்றும் கருத்துக்கணிப்பு விவரங்கள் கூறுகின்றன.

Assembly Elections 2023: மேகாலயாவில் தொங்கு சட்டமன்றமும், திரிபுரா, நாகாலந்தில் பாஜக முன்னிலையில் உள்ளது என்றும் கருத்துக்கணிப்பு விவரங்கள் கூறுகின்றன.

வடகிழக்கு மாநில தேர்தல்களில் மூன்றில் 2 இடத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இந்த மாதத்தில் இம்மூன்று மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. மேகாலாயவில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

கருத்துகணிப்பு விவரங்கள்.

நாகாலாந்து

நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் மேகாலயாவில் 74.32 சதவீதம் வாக்குகளும், நாகாலந்தில் 84.69 சதவீத வாக்குகளும் பதிவாகின. திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 87.63 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இம்மூன்று மாநிலங்களிலும் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதற்கான தேர்தல் முடிவுகள் மார்ச் 2ம் தேதி வெளியிடப்படும்.

நாகாலந்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான எடிபிபி, நாகா மக்கள் முன்னணியைவிட முன்னிலையில் உள்ளது. என்பிஎப் ஒற்றை இலக்கத்தில் தான் வெற்றி பெற வாய்ப்புள்ளது. தேர்தலுக்கு பிந்தைய 4 கருத்து கணிப்புகளும் என்டிபிபி – பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று கூறியுள்ளன. கடந்த முறை சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளே இல்லை.

முதலமைச்சர் நெய்பியு ரியோ, என்டிபிபி – பாஜக கூட்டணி சாதனை வெற்றி பெற்று அடுத்த அரசை எளிதாக அமைத்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் நாகா அரசியல் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார். நாங்கள் அதற்கு நிரந்தர தீர்வு மற்றும் அமைதியை விரும்புகிறோம். மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வித்திடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

திரிபுரா

திரிபுராவில் மும்முனை போட்டி நிலவியது. மூன்று கருத்து கணிப்பு முடிவுகள் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி வெற்றிக்கு மிக அருகில் உள்ளதாக கணிக்கிறது. இடது மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு அதிக தொலைவில் உள்ளது. டைம்ஸ் நவ் – இடிஜி ஆராய்ச்சி மட்டும் இங்கும் பாஜகவுடன் தொங்கும் சட்டமன்றம் சாத்தியம் என்று கூறுகிறது. பாஜக ஒற்றை பெரும்பான்மை கட்சியாக இருக்கும் என்று கூறுகிறது.

நான்கு கருத்துகணிப்புகளும் புதிதாக களம் இறங்கிய திப்ரா-மோத்தா பழங்குடியினர் அதிகமுள்ள இடங்களில் அதிக இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறது.

இந்த நிலையே நீடித்தால் பாஜகவுக்கு இது தொடர் வெற்றியாகும். பாஜக 25 ஆண்டுகள் வேரூரின்றியிருந்த இடது ஆட்சியை 2018ல் மாற்றியிருந்தது.

40 இடங்களில் சிபிஎம் – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று காங்கிரஸ் தலைவர் சுதிப் ராய் பர்மன் கூறினார். எங்களின் முக்கிய நோக்கமே பாஜகாவை அகற்ற வேண்டும் என்பதுதான். மக்கள் விடியலுக்காக காத்திருக்கிறார்கள். தற்போதைய ஆளும் அரசு மார்ச் 2ம் தேதி முடிவுக்கு வரும். புதிய அரசு அமைக்கப்படும் என்று மேலும் தெரிவித்தார்.

மேகாலயா

மேகாலயாவில் கடும் போட்டி நிலவுகிறது. மூன்று கருத்துகணிப்புகள் ஆளும் தேசிய மக்கள் கட்சி தனிப்பெரும்பான்மை கட்சியாக வருவதற்கு வாய்ப்புள்ளது என்றும், பாதியில் கவிழும் நிலையில் உள்ளதால், தொங்கு சட்டமன்றம் அமைவதற்கே அதிகள வாய்புள்ளதாகவும் தெரிவிக்கிறது.

மூன்று கருத்துகணிப்புகளில், முன்னாள் முதலமைச்சர் முகுல் சங்மாவின் தலைமையில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும், தொடர்ந்து காங்கிரஸ், பாஜக வெற்றி பெருவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது.

முதலமைச்சர் கான்ராட் சங்மா,‘ அவரது கட்சிக்கு வாய்ப்புள்ளதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வரும் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த முறை மேகாலயா முழுவதிலும், என்பிபிக்கு ஆதரவு அலை வீசியது. கேரோ மலை பகுதிகளில் மட்டுமல்ல, காஷி மலைப்பகுதிகளிலும் எங்களுக்கான அலையை பார்த்தோம்‘ என்றார்.

கருத்துகணிப்பு துல்லியமாக இருக்கும் என்பதை கூறிவிட முடியாது. முந்தைய காலங்களில் அவை பொய்துள்ளன. குறிப்பாக பல தரப்பு மக்கள் மற்றும் சமூகங்கள் வாழும் மாநிலங்களில் அவை துல்லியமாக கணிக்கவே முடியாது. இந்த தேர்தல் மிக முக்கியமானது. தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறவுள்ள 6 மாநில தேர்தல்கள் மற்றும் 2024 பொதுத்தேர்தல் ஆகியவற்றிற்கான துவக்கமாகும் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேர்தல் சில இடங்களில் 6 மணி வரை நடந்ததாக தேர்தல் அதிகாரிகள் கூறினார்கள். 84.69 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2018ல் 84 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

நாகாலாந்து முதன்மை தேர்தல் அலுவலர் ஷஷாங் ஷேக்கார் கூறுகையில், ஒரு சில வன்முறைகளை தவிர தேர்தல் முழுவதும் அமைதியாகவே நடைபெற்றது. ஒரு விபத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

மொகோக்சங், வோக்கா, மோன், ஷிமின்யூ ஆகிய இடங்களில் அரசியல் கட்சிகளுக்கிடையே சில மோதல்கள் நடைபெற்றதாக நாகாலாந்து போலீஸ் நோடல் அலுவலர் லிமாசுனெப் ஜமீர் தெரிவித்தார்.

நாகாலாந்தின் தேர்தல் வரலாற்றில் இதுவரை பெண்கள் போட்டியிட்டதில்லை. இம்முறை 4 பேர் களத்தில் உள்ளனர். என்டிபிபியின் வேட்பாளர்கள் இருவர், பாஜக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு வேட்பாளரை நிறுத்தியிருந்தது.

மேகாலயாவில் கிட்டத்தட்ட 74.32 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இங்கு 5 மணி வரை தேர்தல் நடைபெற்றாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2018ல் இங்கு 87.7 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி