தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Nirmala Sitharaman: கண்களில் ஃபயர்.. எதிர்க்கட்சிக்கெல்லாம் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவரின் பிறந்தநாள் கதை

HBD Nirmala Sitharaman: கண்களில் ஃபயர்.. எதிர்க்கட்சிக்கெல்லாம் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவரின் பிறந்தநாள் கதை

Marimuthu M HT Tamil

Aug 18, 2023, 08:39 AM IST

google News
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

திடீரென்று ஒரு நாள் ஒரு வீடியோ வைரல் ஆகிறது. அதில் மிகப்பெரும் அந்தஸ்தில் இருக்கும் ஒரு மத்திய அமைச்சர் சடாரென்று ஹைதராபாத்தின் வீதிகளில் இறங்கி வந்து, பாரதப் பிரதமரின் படம் வைக்காத ரேசன் கடை அதிகாரிகளை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிக் கொண்டு இருக்கிறார்.

கோபமும் கண்டிப்பும் கண்களில் அனல் கக்குகின்றன. மறுபுறம் நிர்மலா சீதாராமன் பட்டியலின கட்சித்தொண்டர் வீட்டில் அமர்ந்து தலைவாழை போட்டு உணவு உண்ணுகிறார். அவர் வேறு யாரும் அல்ல.

இந்த இருவேறு எக்ஸ்ட்ரீம் முகங்களுக்குச் சொந்தக்காரர் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். கம்பீரமான ஆளுமையாகவும், களப்பணியாளராகவும் சுற்றிச் சூழலும் பாங்கு ஆகிய இவையிரண்டும் எந்தவொரு அரசியல்வாதியும் நிர்மலா சீதாராமனிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பழக்கங்கள் ஆகும்.

திமுகவை அடிக்கடி வம்புக்கு இழுப்பவர்:

மணிப்பூரில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்க்கட்சிகள்

மக்களவையில் தங்கள் ஜனநாயக குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய முயற்சிக்கின்றன. அப்போது எல்லாம்,

ஆளும் பாஜக ஏதாவது வகையில், ஒரு MP மூலம் பதிலடி கொடுக்கும். கடந்தவாரம் அப்படியொரு

வாய்ப்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாய்க்க, திமுகவை கிடைக்கிற கேப்பில் கடுமையாக அட்டாக் செய்து பேசினார்.

குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை திமுகவினர் சட்டப்பேரவையில் வைத்து சேலையைப் பிடித்து இழுத்ததாகவும், பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்ப திமுகவினருக்கு அருகதை இல்லை எனவும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்கமாக விமர்சித்துள்ளார். அதுதான் தற்போது வரை தமிழ்நாட்டின் ஹாட் டாபிக்.

யார் இந்த நிர்மலா சீதாராமன்?

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பின்பு, ஒரு பெண் முழு நேர மத்திய நிதி அமைச்சரானார் என்றால், அவர் நிர்மலா சீதாராமன் தான். அதுவும் 5 முறை நீண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளவர் என்றால் அப்பெருமைக்குரியவரும் அவரே.

மதுரையில் ஒரு எளியகுடும்பத்தில் பிறந்து இருந்தாலும் திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் இளங்கலை பொருளாதாரமும், டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்திலும் பொருளாதார பாடப்பிரிவில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை நிறைவு செய்திருக்கிறார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கொரோனா காலத்தில் இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் மிகவும் சவாலான பணியை நிதி

அமைச்சராக இருந்து எதிர்கொண்டவர். அதேபோல், உக்ரைன் போரினால் வரும் பணவீக்கப் பிரச்னைகளையும் அனுதினமும் எதிர்கொண்டுவருகிறார்.

நடப்பாண்டில், புதிய வரிவிதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வரை,தனி நபர் வருமான வரி உச்ச வரம்பை உயர்த்திக்காட்டியதன் மூலம் பலரது பாராட்டுகளைப் பெற்றவர், நிர்மலா சீதாராமன்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு. ’முட்டை வைக்கிற கோழிக்குத்தான் வலி தெரியும் உண்டு’. என்னதான் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்றது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களைப் பெற்றாலும், மத்திய நிதி அமைச்சர் என்பது மிகப்பெரும் பொறுப்பு.. அதனை நிர்மலா சீதாராமன் நின்று நிதானமாக ஆடி வருகிறார்.. 

இன்று பிறந்தநாள் காணும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை வாழ்த்தி வணங்குவதில் பெருமைகொள்கிறது, ஹெச்.டி.தமிழ்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி