Crime: மறுத்ததால் கடத்திய மாப்பிள்ளை.. சிறுமி சீரழிப்பு.. மதகுரு உள்பட 9 பேருக்கு சிறை!
Jul 11, 2023, 05:06 PM IST
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞர் உள்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிறுமிகள் மற்றும் வயது முதிர்ந்த பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கட்டுக்கடங்காமல் பெருகி வருகின்றன.
பள்ளியில் பயிலும் மாணவிகளை ஆசிவாரத்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்வது மட்டுமல்லாமல் அதற்கு பிறகு அவர்களை கொடூரமாக கொலை செய்யும் சம்பவம் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது.
இதற்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் குறையாத வண்ணம் நிகழ்ந்து வருகின்றன. ஆசைகளால் இதுபோல கொடூர சம்பவங்களில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க, கோபத்தின் காரணமாக பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவங்களும் இங்கே அரங்கேறி வருகின்றன.
அப்படி ஒரு சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. 11 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஒன்பது பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தில் சாஹில் என்ற இளைஞருக்கும், 11 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சிறுமியின் வீட்டார் திடீரென திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
இதில் கோபமடைந்த சாஹில், அந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் கடந்த ஏழாம் தேதி அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் சாஹில் உள்பட ஐந்து பேர் மீது காவல்துறையினர் முதலில் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பின்னர் தனக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து சிறுமி காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சாஹில், மற்றும் இஸ்லாமிய மதகுருவான மௌலானா உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் ஜூலை 12ஆம் தேதி அதாவது நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்