Top 10 News: ரூ.2,000 தாள்களை மாற்ற இன்றே கடைசி நாள்..சிக்கிம் வெள்ளம் - மேலும் முக்கிய செய்திகள்
Oct 07, 2023, 06:59 AM IST
Top 10 News, October 07, 2023: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு
தமிழ்நாட்டு எம்.பி-களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு சதி செய்கிறது என்று திராவிடர் கழகம் நடத்திய பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருக்கிறார்.
சென்னையில் 504ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தேசம்
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் 22,034 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 2,011 பேர் மீட்கப்பட்டதாக சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 142 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மல்புரா, சுஜான்கா், கச்மன் நகரம் ஆகிய மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அம் மாநில முதல்வா் அசோக் கெலாட் தெரிவித்துள்ளாா்.
சிறாா் ஆபாச பதிவுகள், துன்புறுத்தல் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை விரைந்து நீக்கக்கோரி ‘எக்ஸ்’, ‘யூடியூப்’ மற்றும் 'டெலிகிராம்' தளங்களுக்கு உத்தரவிட்டு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2,000 ரூபாய் தாள்களை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. நாட்டில் புழக்கத்தில் இருந்த 96 சதவீதம் 2000 ரூபாய் தாள்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அக் 8-க்கு பிறகு 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் 20,000 ரூபாய் வரை ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், ப்ராம்ப்டன் நகரில் தடை செய்யப்பட்ட கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக 19 முதல் 26 வயது வரையிலான 8 சீக்கிய இளைஞா்கள் அந்நாட்டுப் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
அமெரிக்கா- இந்தியா இடையேயான வலிமையான ராணுவ ஒப்பந்தம் தொடரும் என பென்டகன் செய்தித் தொடா்பாளா் பேட் ரைடா் தெரிவித்துள்ளாா்.
விளையாட்டு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் மோதும் போட்டி காலை 10.30 மணிக்கு தரம்சாலாவில் தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதும் போட்டி பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் நடக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்