தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mizoram Assembly Election 2023: மிசோரத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது! பாஜக, காங். கட்சிகளின் நிலை என்ன? முழு விவரம் இதோ!

Mizoram Assembly Election 2023: மிசோரத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது! பாஜக, காங். கட்சிகளின் நிலை என்ன? முழு விவரம் இதோ!

Kathiravan V HT Tamil

Jan 06, 2024, 08:54 PM IST

google News
”இன்று நடைபெறும் வாக்குகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன” (PTI)
”இன்று நடைபெறும் வாக்குகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன”

”இன்று நடைபெறும் வாக்குகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன”

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் டிசம்பர் 3 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

மொத்தமுள்ள 1,276 வாக்குச் சாவடிகளில் 8 லட்சத்து 50 ஆயிரத்து 288 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் இன்று பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

வாக்குப்பதிவு எப்போது தொடங்கும்? மிசோரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் யார்? மாநிலத்தில் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் பிரச்சினைகள் என்ன? — மிசோரம் தேர்தல் 2023-இன் முழுவிவரம் இதோ!

> எத்தனை பெண்கள் மற்றும் ஆண் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்?

மிசோரம் மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகம். மொத்தமுள்ள 8,50,288 வாக்காளர்களில் 4,13,062 பேர் ஆண்கள், 4,39,026 பேர் பெண்கள். வாக்காளர்கள் யாரும் தங்களை மூன்றாம் பாலினத்தவராக அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. 18 முதல் 19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்கள் 50,751 பேர் உள்ளனர்

Mizoram Election 2023 Factsheet

> எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்?

மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் 18 பெண்கள் உட்பட மொத்தம் 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

> எந்த அரசியல் கட்சி எத்தனை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது?

ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF), முக்கிய எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை தலா 40 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 23 இடங்களிலும், முதல்முறை போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) 4 இடங்களிலும் போட்டியிடுகின்றன. 27 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர் .

> மிசோரம் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வீரர்கள்/வேட்பாளர்கள் யார்?

MNF தலைவரும் மிசோரம் முதலமைச்சருமான ஜோரம்தங்கா இந்தத் தேர்தலில் மிக முக்கியமான முகங்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். 2018 சட்டமன்றத் தேர்தலில் ஐஸ்வால் கிழக்கு-I தொகுதியில் வெற்றி பெற்ற ஜோரம்தங்கா, தற்போதும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM), மூன்று முறை முதலமைச்சராக இருந்தவரை எதிர்த்து போட்டியிட அக்கட்சியின் துணைத் தலைவர் லால்தன்சங்காவை களம் இறக்கி உள்ளது.

இதற்கிடையில், முதல்வர் ஜோரம்தங்காவை எதிர்த்துப் போட்டியிட லால்சங்லுரா ரால்டே என்பவரை காங்கிரஸ் முன்னிறுத்தி உள்ளது.

2. முன்னாள் மிசோரம் நிதி அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான லால்சவ்தா, ஐஸ்வால் மேற்கு-III தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், ZPM வேட்பாளர் VL ஜைதன்ஜாமா மற்றும் MNF வேட்பாளர் K Sawmvela ஆகியோரை எதிர்த்து நிற்கிறார்.

3. MNF துணைத் தலைவரான மிசோரம் துணை முதல்வர் டவ்ன்லூயா துய்சாங்கில் போட்டியிடுகிறார். 80 வயதான டவுன்லூயா, தேர்தலில் போட்டியிடும் மூத்த வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

4. பாஜக மிசோரம் தலைவர் வன்லால்முகா தம்பா தொகுதியில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

> 2023 மிசோரம் தேர்தலில் முக்கிய பிரச்சினைகள் என்ன?

1. வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு: புதிய மிசோரம் அரசு மாநிலத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என இளம் வாக்காளர்கள் நம்புகின்றனர். "வேலையில்லாத் திண்டாட்டத்தில் மிசோரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. வேலை வாய்ப்பை வழங்கும் மற்றும் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்கக்கூடிய அரசு எனக்கு வேண்டும். ஊழலற்ற ஆட்சியை நாங்கள் விரும்புகிறோம் என முதல்முறை வாக்காளாரான 19 வயதான பெலிஷா ஏ.என்.ஐ நிறுவனத்திடம் கூறி உள்ளார்.

2. அகதிகள்: மணிப்பூரில் இனக்கலவரத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக மிசோரம் மாநிலத்தில் குடியேறி உள்ளனர். இதுவும் அம்மாநில தேர்தலில் முக்கிய தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

3. ஊழல்: முன்னாள் முதல்வர் லால் தன்ஹாவ்லா மற்றும் தற்போதைய முதல்வர் ஜோரம்தங்கா இருவர் மீது ஊழல் வழக்குகள் உள்ள நிலையில், உள்ளூர் நீதிமன்றங்களில் நடந்த வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர். இருப்பினும், இது தேர்தல் பரப்புரையில் முக்கிய தாக்கம் செலுத்தும் ஒன்றாக மாறி உள்ளது.

4. எல்லைத் தகராறு: அஸ்ஸாமுடன் நடந்து வரும் எல்லைப் பிரச்சனைகள் இரு மாநிலங்களிலும் அழுத்தமான பிரச்சினையாகவே உள்ளது. மிசோரமில் போதைப்பொருள் வரத்து அதிகரித்து வருவது குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.

> MNF மற்றும் BJP கூட்டணி கட்சிகளா?

ஆளும் MNF கட்சி தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) அங்கம் வகித்து வருகிறது. ஆனால் அம்மாநிலத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று அறிவித்துள்ளது.

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு ஜோரம்தங்கா அளித்த பேட்டியில் , “இந்த மாநிலத்தில் பாஜக எங்களுக்குத் தேவையில்லை. மிசோரமில் பாஜகவுக்கு இடமில்லை என்று நான் எப்போதும் கூறி வருகிறேன், ஏனென்றால் நாங்கள் ஒரு கிறிஸ்தவ மாநிலம் மற்றும் சிக்கலான சமூகம் என கூறி இருந்தார்.

> பாஜக தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதி அளித்துள்ளது?

பாஜக தனது தேர்தல் அறிக்கையில், விளையாட்டுத் துறையில் வளர்ச்சியில் கவனம் செலுத்தியதுடன், போதைப்பொருள் இல்லாத மிசோரம் ஆபரேஷன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தைத் தொடங்குவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது. அது LOTUS திட்டத்தை தொடங்குவதாக உறுதியளித்து உள்ளது.

> காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதி அளித்துள்ளது?

மிசோரம் மக்களுக்கு 750ரூபாய் விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர், முதியோர் ஓய்வூதியம் மாதம் 2,000, மருத்துவ காப்பீடு 15 லட்சம் வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. “திறமையான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை காங்கிரஸ் கட்சி அமைக்கும். கிராம சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம், அதிக பொறுப்புகள் மற்றும் நிதி ஆதாரங்களை வழங்குவதன் மூலம் ஜனநாயகத்தை காங்கிரஸ் அரசு பலப்படுத்தும்" என்று மிசோரம் காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரொனால்ட் சபா ட்லாய் கூறி உள்ளார்.

> தேர்தலுக்கு முன் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, சுமார் 3,000 போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படை போலீஸ் படைகள் (CAPF) தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

> 2018 மிசோரம் தேர்தலில் என்ன நடந்தது?

2018 மிசோரம் சட்டமன்றத் தேர்தலில், மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) 37.8 சதவீத வாக்குகளைப் பெற்று 26 இடங்களைப் பெற்றது. 10 ஆண்டுகால காங்கிரஸ் அரசை தோற்கடித்து அக்கட்சி வெற்றி பெற்றது.

2018 தேர்தலில் வியக்கத்தக்க வகையில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பிராந்தியக் கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) எட்டு இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி ஐந்து இடங்களையும் பாஜக ஒரு இடத்தை வென்றது.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை