Meghalaya Election Results 2023: ஆளும் என்பிபி முன்னிலை...பாஜகவுக்கு பின்னடைவு
Mar 02, 2023, 11:44 AM IST
வடகிழக்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் திரிபுரா, நாகலாந்து மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், மேகாலயாவில் பின்னடைவை சந்தித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகலயா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் மேகாலயா மாநிலத்திலுள்ள 60 தொகுதிகளுக்கு கடந்த 16ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெற்றது. இதையடுத்து சட்டபேரவை தேர்தலில் அங்கு 90 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இதைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஆளும் கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 25 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 7 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 22 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
எந்தவொரு கட்சியும் தனிபெரும்பான்மை பெறாத நிலையில், மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
டாபிக்ஸ்