MadhyaPradesh Exit Poll: மத்தியப் பிரதேச தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியீடு; பாஜக வெல்ல வாய்ப்பு
Dec 01, 2023, 08:38 PM IST
மத்தியப்பிரதேச தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
5 மாநில தேர்தல் நடைபெற்றுமுடிந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில் மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 இடங்களில் 116 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைத்துவிடலாம்.
இதுதொடர்பாக சிஎன்என் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக 116 தொகுதியையும், காங்கிரஸ் 111 தொகுதியையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற கட்சியினர் 3 தொகுதிகளைக் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள மத்தியப்பிரதேச தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 118 முதல் 130 தொகுதிகளைக் கைப்பற்றும்; காங்கிரஸ் - 97 முதல் 107 தொகுதிகளைக் கைப்பற்றும் என ரிபப்ளிக் டிவி குறிப்பிட்டுள்ளது. மேலும், மற்ற கட்சிகள் 0-2 தொகுதிகளைக் கைப்பற்றும் எனக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி பெரும்பான்மையை பாஜக கைப்பற்றும் எனக்குறிப்பிட்டுள்ளது, ரிபப்ளிக் டிவி.
மேலும், மத்தியப் பிரதேசத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக பெரும்பான்மை பெறும் என சாணக்யா டிவி செய்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதில் பாஜக - 151 தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் 74 இடங்களைக் கைப்பற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மற்ற கட்சியினர் 5 தொகுதிகளைக் கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்