தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Madhya Pradesh Polls: ‘ஹேம மாலினியை நடனமாட வைத்தேன்’-சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்

Madhya Pradesh Polls: ‘ஹேம மாலினியை நடனமாட வைத்தேன்’-சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்

Manigandan K T HT Tamil

Jan 08, 2024, 11:10 AM IST

google News
மத்தியப் பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, பாஜக எம்.பி.யான ஹேம மாலினியை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, பாஜக எம்.பி.யான ஹேம மாலினியை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, பாஜக எம்.பி.யான ஹேம மாலினியை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா தனது தொகுதியில் ‘ஹேமமாலினியை நடனமாட வைத்தேன்’ என பேசிய வீடியோ வைரலானதால் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

நரோட்டம் மிஷ்ரா தாதியா தொகுதிக்கு செய்த வளர்ச்சிப் பணிகளை எண்ணிப் பார்க்கையில், தாதியாவில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது மட்டுமல்லாமல், ஹேமா மாலினியை நடனமாடச் செய்ததாகவும் கூறினார்.

ம்த்தியப் பிரதேசத்தில் உள்ள தாதியா தொகுதி நரோட்டம் மிஸ்ராவின் கோட்டையாகும்,  2023 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தாதியாவிலிருந்து மிஸ்ரா தொடர்ந்து 4வது முறையாக போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார்.

விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், இவ்வாறு பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் நரோட்டம் மிஷ்ரா.

காங்கிரஸ் விமர்சனம்

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் கூறுகையில், "ஹேமமாலினி பாஜக எம்.பி ஆவார். ஆனால் நரோட்டம் மிஷ்ரா தனது சொந்த கட்சி எம்.பி.யைக் கூட விட்டுவைக்கவில்லை. பெண்கள் மீதான பாஜக அமைச்சரின் உண்மையான அவலத்தை கேளுங்கள்" என்று குறிப்பிட்டு திக்விஜய சிங் வீடியோவைப் பகிர்ந்து ட்வீட் செய்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை