தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka Election Results: ’அன்பு வெறுப்பை வீழ்த்திவிட்டது’ தேர்தல் வெற்றி குறித்து ராகுல் காந்தி பேட்டி

Karnataka Election Results: ’அன்பு வெறுப்பை வீழ்த்திவிட்டது’ தேர்தல் வெற்றி குறித்து ராகுல் காந்தி பேட்டி

Kathiravan V HT Tamil

May 13, 2023, 03:08 PM IST

google News
"புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் கட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்" (PTI)
"புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் கட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்"

"புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் கட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்"

கர்நாடகாவில் 137 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் பெரும்பான்மை பெறுவது அவசியம், தேவையான 113 தொகுதிகளை விட கூடுதலாக 20 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 62 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 21 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பு பிரகாசமாகி உள்ளநிலையில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அமர்ந்து பேசி முடிவெடுப்போம் என கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமாரும், எம்.எல்.ஏக்கள் கூடி அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கர்நாடக தேர்தல் வெற்றி முதலாளித்துவத்திற்கு எதிரான எளிய மக்கள் பலத்தின் வெற்றி என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்.பி.ராகுல் காந்தி, கர்நாடாடக மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் அன்பு வெறுப்பை வீழ்த்தியதாகவும், இது மற்ற எல்லா மாநிலங்களிலும் நடக்கும் என்றார்.

புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் கட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்த ராகுல் காந்தி, கர்நாடாக போரில் வெறுப்பு எனும் ஆயுதத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தவில்லை என்ற ராகுல் காந்தி, “நாங்கள் மக்களின் பிரச்னைகளுக்காக போராடினோம்” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி