தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka Election Results: ’கர்நாடக மக்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்’ கண்ணீர் விட்ட டி.கே.சிவக்குமார்

Karnataka Election Results: ’கர்நாடக மக்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்’ கண்ணீர் விட்ட டி.கே.சிவக்குமார்

Kathiravan V HT Tamil

May 13, 2023, 01:36 PM IST

google News
”நான் சிறையில் இருந்த போது என்னை சோனியா காந்தி சந்திக்க வந்ததை என்னால் மறக்க முடியாது.” (PTI)
”நான் சிறையில் இருந்த போது என்னை சோனியா காந்தி சந்திக்க வந்ததை என்னால் மறக்க முடியாது.”

”நான் சிறையில் இருந்த போது என்னை சோனியா காந்தி சந்திக்க வந்ததை என்னால் மறக்க முடியாது.”

கர்நாடகாவில் 133 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் பெரும்பான்மை பெறுவது அவசியம், தேவையான 113 தொகுதிகளை விட கூடுதலாக 20 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 64 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 21 இடங்களிலும், மற்றவர்கள் 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான டி.கே.சிவக்குமார் கனகபுராவிலும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர். கர்நாடகாவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தாலும் சுதந்திரமாக ஆட்சியை நடத்த 140 தொகுதிகள் வரை வெற்றி பெற வேண்டும் என கருதுகிறது. கர்நாடகாவில் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். தேர்தலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார் ”காங்கிரஸ் கட்சி உறுதியாக 141 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், கர்நாடக மக்களின் காலில் விழுந்து வணங்குகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு நன்றி. என் தலைவர்களும், கட்சி தொண்டர்களுமே இந்த வெற்றிக்கு காரணம். அவர்கள் கடுமையாக உழைத்தார்கள், எங்களுக்கு ஆதரவாக தலைவர்கள் இருந்தார்கள். இது ஒரு கூட்டு தலைமையால் கிடைத்த வெற்றி என்றார்.

பேசிக்கொண்டிருக்கும் போது உணர்ச்சிவசப்பட சிவக்குமார் தழுத்தழுத்த குரலில், ”நான் கர்நாடகாவை காப்பாற்றி தருவேன் என்று சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்க்கே ஆகியோருக்கு உறுதி அளித்திருந்தேன். காங்கிரஸ் கட்சி அலுவலகம் எங்கள் கோயில் போன்றது; அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அங்கு முடிவு செய்வோம். சிறையில் இருந்த போது என்னை சோனியா காந்தி சந்திக்க வந்ததை என்னால் மறக்க முடியாது.” என உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

அடுத்த செய்தி