தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Karnataka Election 2023: Karnataka Election Polling To Be Held On May 10 - Chief Election Commissioner Rajiv Kumar Announces

karnataka Election 2023: மே 10இல் கர்நாடக தேர்தல் மே 13இல் வாக்கு எண்ணிக்கை!

Kathiravan V HT Tamil

Mar 29, 2023, 12:09 PM IST

ஒரு வாக்கு சாவடியில் 883 பேர் வாக்களிக்கும் வகையில் 58,282 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
ஒரு வாக்கு சாவடியில் 883 பேர் வாக்களிக்கும் வகையில் 58,282 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

ஒரு வாக்கு சாவடியில் 883 பேர் வாக்களிக்கும் வகையில் 58,282 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகாவில் மே மாதம் 24ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பது விதிமுறை. கர்நாடகாவில் முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் எண்ணிக்கை 9.17 லட்சமாக உள்ளது. வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி 18 வயதை பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்க தகுதி உடையவர்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

Elon Musk arrives in China: இந்தியப் பயணத்தை ஒத்திவைத்த சில நாட்களில் சீனா சென்ற பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்!

Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி வாக்கத்தான்

திண்ணை பள்ளியில் கல்வி.. தமிழ் எங்கள் மூச்சு.. தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்த உ.வே.சா..!

Mamata Banerjee: ’ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்த மம்தா பானர்ஜி!’ தேர்தல் பரப்புரைக்கு சென்ற போது அசம்பாவிதம்!

கர்நாடகாவில் 2.62 கோடி ஆண் வாக்காளர்கள், 2.59 கோடி பெண் வாக்காளர்கள் என 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 36 தனித்தொகுதிகளும் 15 பழங்குடியினர் தொகுதிகளும் உள்ளது.

ஒரு வாக்கு சாவடியில் 883 பேர் வாக்களிக்கும் வகையில் 58,282 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கர்நாடகா தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் மே மாதம் 10 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 13ஆம் தேதியும் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏப்ரல் 13ஆம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 24ஆம் தேதி கடைசிநாள் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.