தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Jharkhand: ’உச்சக்கட்ட பரபரப்பு! ஜார்க்கண்டில் ஆட்சி தப்புமா?’ இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

Jharkhand: ’உச்சக்கட்ட பரபரப்பு! ஜார்க்கண்டில் ஆட்சி தப்புமா?’ இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

Kathiravan V HT Tamil

Feb 05, 2024, 07:13 AM IST

google News
”Jharkhand: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது” (ANI)
”Jharkhand: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது”

”Jharkhand: ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது”

ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், முதல்வருமான சம்பாய் சோரன் தலைமையிலான ஆளும் கூட்டணியின் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. 

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தலைவராகவும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகவும் இருந்த ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தனது முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். 

இதனால் மூத்த ஜே.எம்.எம் தலைவர் சம்பாய் சோரன் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த நிலையில், முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் ஜார்க்கண்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகாகத்பந்தன் (மகா கூட்டணி) இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறது.

ஜார்க்கண்ட் சட்டசபை அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்தது என்ன?

ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) கூட்டணி, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) ஆகிய  கட்சிகள் குதிரைபேரத்தை தடுக்க தங்கள் எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவுக்கு அனுப்பி வைத்தன.

முதலமைச்சர் பதவி ஏற்புக்கு பிறகு ஹைதராபாத் சென்ற ஆளும் கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள், தற்போது சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக தெலுங்கானா தலைநகரில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்த நிலையில் நேற்று ஜார்க்கண்ட் திரும்பினர். 

ஆபரேஷன் தாமரை என்று எதிர்க்கட்சிகள் அழைக்கும் முயற்சியில் சில எம்.எல்.ஏ.க்களை பாஜக அணுகியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் ஆளும் கூட்டணிக்கு 47 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது 43 எம்.எல்.ஏ.க்கள் சம்பை சோரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்களும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியனுக்கு 3 எம்எல்ஏக்களும் உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு தலா ஒருவரும், 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். அமலாக்கத் துறையின் கடுமையான ஆட்சேபனைகளை மீறி ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இதற்கு அனுமதி அளித்துள்ளது.

நில மோசடி வழக்கில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதால் தூண்டப்பட்ட மாநிலத்தில் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் சம்பாய் சோரன் ராஞ்சியில் உள்ள ராஜ் பவனில் ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார்.

சம்பாய் சோரனுடன், காங்கிரஸின் ஆலம்கீர் ஆலம் மற்றும் ஆர்.ஜே.டியின் சத்யானந்த் போக்தா ஆகியோரும் ஜார்க்கண்ட் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கத்தைப் பாதுகாக்க ஆளும் எம்.எல்.ஏ.க்கள் ஹைதராபாத்திற்கு அனுப்பப்பட்டனர். "எங்கள் எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்... எங்களுக்கு 48 முதல் 50 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என ஹைதராபாத்தில் இருந்து திரும்பிய மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம்  திரும்பினார். 

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி