Photo Of Neptune Planet: நெப்டியூன் கோளின் துல்லியமான புகைப்படம் வெளிய வெளியீடு!
Sep 22, 2022, 11:15 PM IST
ஜேம்ஸ் வெப் எனும் தொலைநோக்கி நெப்டியூன் கோளை துல்லியமாகப் படம் பிடித்து அனுப்பி உள்ளது.
விண்வெளி ஆய்வுக்காக நாசா ஜேம்ஸ் வெப் எனும் தொலைநோக்கியை உருவாக்கியுள்ளது. இது கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.
மேலும் இது 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் சூரியனைச் சுற்றும் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சில மாதங்களுக்கு முன் படம் பிடித்து அனுப்பிய புகைப்படங்கள் அனைத்து தரப்பினரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. அதேசமயம் மிகப்பெரிய கோளாறு வியாழன் கோளை கடந்த மாதம் துல்லியமாகப் படம் பிடித்து அனுப்பியது.
இந்நிலையில் தற்போது சூரியக் குடும்பத்தில் இருக்கும் எட்டாவது கோளாறு நெப்டியூன் கொலை துல்லியமாகப் படம் பிடித்து இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நமக்கு அனுப்பியுள்ளது. இதனை நாசா தற்போது அனைவரின் பார்வைக்கும் வெளியிட்டுள்ளது.
கடந்த 33 ஆண்டுகளுக்குப் பிறகு நெப்டியூன் கிரகத்தைத் துல்லியமாக எடுக்கப்பட்ட புகைப்படம் இதுதான். பார்க்கும்போதே அந்த புகைப்படம் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. சூரியனிலிருந்து 30 மடங்கு தொலைவில் நெப்டியூன் கோள் உள்ளது. எனவே சூரியன் மிகவும் மங்கலாகவும் சிறியதாகவும் தெரியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.