INS Vikrant: ஐஎன்எஸ் விக்ராந்த் நாட்டிற்கு அா்பணிப்பு-முக்கிய செய்திகள் (செப்.2)
Sep 02, 2022, 05:54 PM IST
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் நாட்டிற்கு அர்பணிப்பு, மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிரிழந்த குழந்தை உள்பட இன்றைய முக்கிய செய்திகளை சுருக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கொச்சி கப்பல் தட்டும் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட்டிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஆா்எஸ்எஸ் அமைப்பில் உள்ள அனைவரும் மோசமானவா்கள் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானா்ஜி கூறியதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹரியாணாவின் பஞ்ச்குலாவின் செக்டார் 9-ல் உள்ள ரெஹ்ரி சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 130 கடைகள் எரிந்து நாசமானதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிச் மாணவிகளுக்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக பதிவான புகாரில் கைது செய்யப்பட்ட கர்நாடக மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புதிய தேசியக் கல்விக் கொள்கை அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வி அளிப்பதும், வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் விதமாகவும் அமைந்திருப்பதாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக கல்யாண் செளபே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தால், சிகிச்சை பெற முடியாமல் 5 வயது சிறுவன், தாயின் மடியிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அம்பாஜியில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலான அரசியலில் பா.ஜ.,வுக்கு மாற்று நாங்கள் மட்டுமே. எங்கள் கட்சி நாட்டை ஆள மக்கள் விரும்புகின்றனர் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பழமைவாய்ந்த ஆரோக்கிய அன்னை ஆலய 332-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
தெலங்கானா மாநிலம் காமரெட்டியில் ஒன்றிய அமைச்சா் நிர்மலா சீதாராமனின் காரை காங்கிரஸ் கட்சியினர் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய கடற்படைக்காக வடிவமைக்கப்பட்ட 'நிஷான்' என்றழைக்கப்படும் புதிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் இன்று அறிமுகப்படுத்தினார்.
புகழ்பெற்ற ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்ஷ்மன் நரசிம்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் ஒரேநாளில் புதிதாக 6,168 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 58 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தத்துவாடா அருகே சிலிண்டர்கள் ஏற்றிசென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்டதால் 100 சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
டாபிக்ஸ்