தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  நெஞ்சை உலுக்கும் சம்பவம் - தொப்புள் கொடி அறுக்கப்படாத பச்சிளம் குழந்தை!

நெஞ்சை உலுக்கும் சம்பவம் - தொப்புள் கொடி அறுக்கப்படாத பச்சிளம் குழந்தை!

Feb 08, 2023, 02:11 PM IST

google News
Turkey Earthquake Updates: துருக்கி நிலநடுக்கத்தின் இடர்பாடுகளில் தொப்புள் கொடி அறுக்கப்படாத பச்சிளம் குழந்தையை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.
Turkey Earthquake Updates: துருக்கி நிலநடுக்கத்தின் இடர்பாடுகளில் தொப்புள் கொடி அறுக்கப்படாத பச்சிளம் குழந்தையை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

Turkey Earthquake Updates: துருக்கி நிலநடுக்கத்தின் இடர்பாடுகளில் தொப்புள் கொடி அறுக்கப்படாத பச்சிளம் குழந்தையை மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

உலகமே சோகத்தில் மூழ்கும் அளவிற்குத் துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல அடுக்குமாடி கட்டிடங்களும் தரைமட்டமாகி கீழே சரிந்து விழுந்தன.

பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை பாரபட்சம் இல்லாமல் பலர் உயிரிழந்தனர். இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் பலர் பெற்றோரின் அரவணைப்புக்குள் கொத்துக்குத்தாக இறந்து கிடந்தனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் பார்ப்பவரைக் கலங்க வைக்கும் அளவிற்கு உள்ளது. தற்போது துருக்கி மற்றும் சிரியாவில் மீட்புப் படையினர் கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீடியோக்கள் பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது. இதில் சிரியா நாட்டில் அப்ரின் நகரில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்று இடிந்து விட்டது. அங்கே நோயாளிகள் பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாக மீட்புக் குழுவினர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

உடனே சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புக் குழுவினர் நவீன கருவிகள் மூலம் உயிரோடு இருப்பவர்களைக் கண்டறிந்து முதலில் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இடர்ப்பாடுகளில் இருந்து கீழே இரத்தம் சொட்டுவதைக் கண்டனர்.

உடனே அங்கு இடிந்து கிடந்த பொருட்களை நீக்கி பார்த்ததில் இடர்ப்பாடுகளில் அடியில் இளம் பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவரை அப்படியே மெதுவாக வெளியே எடுத்த போது அங்கே பச்சிளம் குழந்தை ஒன்று லேசான காயத்துடன் முனகிக் கொண்டிருப்பதைக் கேட்டுள்ளனர்.

இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் இறந்து போன தாய்க்கும், அந்த குழந்தைக்கும் தொப்புள் கொடி அறுக்கப்படாமல் இணைந்தே இருந்தது. இதனைக் கண்டு மீட்புக் குழுவினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

உடனே சுதாரித்த மீட்புப் படையினர் அந்த பச்சிளம் குழந்தையைக் கையில் எடுத்து அணைத்தபடி வெளியே மீட்டனர். தொப்புள் கொடி அறுக்கப்படாமல் இருந்த பச்சிளம் குழந்தையைத் தாயிடமிருந்து பிரித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தற்போது அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இதன் புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கி உள்ளது

டாபிக்ஸ்

அடுத்த செய்தி