தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  குடியரசு தின அணிவகுப்பு: இந்திய தயாரிப்பு ஆயுதங்கள் மட்டும் பங்கேற்பு!

குடியரசு தின அணிவகுப்பு: இந்திய தயாரிப்பு ஆயுதங்கள் மட்டும் பங்கேற்பு!

Jan 24, 2023, 02:14 PM IST

google News
Republic Day Parade: இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டுமே காண்பிக்கப்பட உள்ளது. (ANI)
Republic Day Parade: இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டுமே காண்பிக்கப்பட உள்ளது.

Republic Day Parade: இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டுமே காண்பிக்கப்பட உள்ளது.

இந்தியா தனது 74வது சுதந்திரத்தை ஜனவரி 26 வியாழன் அன்று கொண்டாடுகிறது.

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், இந்திய ராணுவம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டுமே காட்சிக்கு வைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

"கே-9 வஜ்ரா ஹோவிட்சர்கள், MBT அர்ஜுன், நாக் எதிர்ப்பு தொட்டி வழிகாட்டும் ஏவுகணைகள், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள், ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் விரைவு எதிர்வினை சண்டை வாகனங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் நடைபெறும் அணிவகுப்பு பார்வைக்கும், வீரத்திற்கும் விருந்தாக இருக்கும். அதில் குறிப்பாக ராணுவ வீரர்களின் அணிவகுப்பில் இடம் பெறும் அவர்களின் ஆயுதங்கள், இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளாலும் கவனிக்கப்படும். 

கடந்த காலங்களில் இந்திய ராணுவ அணிவகுப்பில் வெளிநாடுகளில் வாங்கிய ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த முறை, இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை அணிவகுப்பில் பயன்படுத்த முடிவு செய்தனர்.

இந்தியாவின் ராணுவ வளர்ச்சியை வெளிப்படுத்தவும், தயாரிப்பு வளத்தை அறிந்து கொள்ளவும் , இந்த கண்காட்சி சான்றாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியனும் பெருமைகொள்ளும் விதமாக இந்த குடியரசுத் தின அணிவகுப்பு அமையும். 

இந்த தகவலை ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி