Covid 19 Update: இந்தியாவில் கொரோனாவால் 29 பேர் உயிரிழப்பு
Apr 23, 2023, 10:34 AM IST
இந்தியாவில் ஒரே நாளில் 10,112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வந்த வண்ணம் உள்ளது.
அதன் படி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 193 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். டெல்லியில் 6 பேர், மகாராஷ்டிரத்தில் 5 பேர் ஆகும்.
இதன் மூலம் பலி எண்ணிக்கை 5,31,329 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 66, 170 லிருந்து 67, 556 ஆக உயர்ந்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,81,877 லிருந்து 4,48,91,989 ஆக உயர்ந்து உள்ளது.
நேற்று 9 ஆயிரத்து 833 பேர் தொற்றில் இருந்து குணமடைந்த வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 92 ஆயிரத்து 854 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்தை 806 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம் தமிழ் நாடு ஆகிய மாநிலங்களில் அதிகமாக தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக ஏப்ரல் 14 ஆம் தேதி 11,109 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகமாக பதிவானது.
இதுவரை தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ் நாட்டில் நேற்று 519 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 250 ஆண்கள் மற்றும் 269 பெண்கள் அடங்குவார்கள்.
கடந்த 15 நாட்களில் மட்டும் தினசரி பாதிப்பு 300 க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது அதை தாண்டி உள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,676 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ் நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 104 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம். மாநில உதவி மையம் :104
டாபிக்ஸ்