தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Independence Day 2022: நாட்டுப்புறக் கலைஞர்களுடன் நடனமாடிய மம்தா பானர்ஜி

Independence Day 2022: நாட்டுப்புறக் கலைஞர்களுடன் நடனமாடிய மம்தா பானர்ஜி

Karthikeyan S HT Tamil

Aug 15, 2022, 03:59 PM IST

google News
மேற்கு வங்க தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தேசியக் கொடியேற்றி உரையாற்றினார்.
மேற்கு வங்க தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தேசியக் கொடியேற்றி உரையாற்றினார்.

மேற்கு வங்க தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தேசியக் கொடியேற்றி உரையாற்றினார்.

கொல்கத்தா: சுதந்திர தின கொண்டாட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாட்டுப்புறக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார்.

நாடு முழுவதும் இன்று 75ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி ஆசாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் பல்வேறு சுதந்திர தின நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று நாடெங்கும் வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி அனைத்து மாநிலங்களின் முக்கிய அலுவலகங்கள், தலைநகரங்களில் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்திலும் தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தேசியக் கொடியேற்றி உரையாற்றினார்.

இதன் பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது நாட்டுபுறக் கலைஞர்களுடன் முதல்வர் மம்தா பானர்ஜி உற்சாகமாக நடனமாடினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

முன்னதாக, நாட்டின் ஜனநாயக விழுமியங்களின் கண்ணியத்தை இந்தியர்கள் நிலை நிறுத்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது டுவிட்டில், "இன்று, நமது நாட்டின் சுதந்திரத்திற்கு வழிவகுத்த நமது முன்னோர்களின் உச்சபட்ச தியாகத்துக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். இந்திய மக்களாகிய நாம், அவர்களின் புனிதமான பாரம்பரியத்தை பாதுகாத்து, நமது ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மக்களின் உரிமைகளின் கண்ணியத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மற்றொரு டுவீட்டில், “இந்த மகத்தான தேசத்தின் மக்களுக்கு எனது வாக்குறுதி என்னவென்றால், நமது கனவு இந்தியாவுக்காக நான் ஒவ்வொரு நாளும் பாடுபடுவேன். என் சக இந்தியர்களே, இந்தியாவைப் பற்றிய உங்கள் கனவு என்ன?”. என்று பதிவிட்டிருந்தார்.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி