565 கோடி…! மாடுகளை விற்க இ-காமர்ஸ்தளம்! அசத்தும் ஐஐடி பெண்கள்!
Apr 11, 2023, 11:03 AM IST
ஜூலை 2021 நிலவரப்படி தோராயமாக 75 மில்லியன் டாலர் (565 கோடி) மதிப்பு கொண்ட நிறுவனமாக அனிமல் உருவெடுத்துள்ளது.
ஐஐடி டெல்லியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கால்நடைகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் 'Animall' என்ற ஆன்லைன் தளத்தைத் தொடங்கி உள்ளனர், இதன் விளைவாக வருமானம் அதிகரிக்கும்.
2022ஆம் நிதியாண்டில் இந்த இயங்குதளத்தின் வருவாய் 7.4 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது, மேலும் அது இப்போது குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ந்து 565 கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது என ஸ்டார்ட்அப் பீடியா தெரிவித்துள்ளது.
அனிமாலின் நிறுவனர்களான அனுராக் பிசோய், கிர்த்தி ஜங்ரா, லிபின் வி பாபு மற்றும் நீது ஒய் ஆகியோர், பால் பண்ணையாளர்களின் வாழ்க்கையை உயர்த்தவும், கால்நடை வர்த்தகம் மற்றும் பால் பண்ணையை அதிக லாபகரமான இடமாக மாற்றவும் இந்த தளத்தை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கம்பெனிகள் பதிவு சட்டத்தில் (RoC) தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையில், இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் 2021ஆம் நிதியாண்டில் இருந்து 2022ஆம் நிதியாண்டு வரை இயக்க அளவில் ஏற்றம் கண்டது. குறிப்பாக, 148 மடங்கு இதில் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன, இதன் செயல்பாட்டு அளவு 2021ஆம் நிதியாண்டில் ₹5 லட்சத்தில் இருந்து 2022 நிதியாண்டில் 7.4 கோடி ரூபாயாக உயர்ந்தது.
மேலும் இந்த டிஜிட்டல் தளம் கால்நடைகள் விற்பனையை மட்டுமின்றி கால்நடைகளுக்கான சுகாதார சேவைகளையும் வழங்குகிறது. கடந்த 2022ஆம் நிதியாண்டில் கால்நடை வர்த்தகம் மூலம் தனது வருவாயில் 90 சதவீதத்தை 2022 நிதியாண்டில் இந்நிறுவனம் ஈட்டி உள்ளது. மீதமுள்ள 10% வருவாய் சுகாதாரம், செயற்கை கருவூட்டல் மற்றும் சந்தை கமிஷன் ஆகியவற்றில் இருந்து வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் நிதியாண்டில் 3.94 கோடி ரூபாய் நிதி வருமானத்தையும் ஈட்டியது, அதன் மொத்த வசூல் தொகை 11.34 கோடியாக இருந்தது. இருப்பினும், ஸ்டார்ட்அப் விற்பனை மற்றும் விநியோகத்தில் 18.04 கோடி ரூபாய் செலவானது, இது 2022ஆம் நிதியாண்டில் அதன் மொத்த செலவில் 32.5% ஆகும். இந்த எண்ணிக்கை 2021 நிதியாண்டில் செலவிடப்பட்ட ₹9.62 கோடியை விட கணிசமாக அதிகமாகும்.
Beenext, Sequoia, Nexus Ventures போன்ற முக்கிய முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 170 கோடி நிதி திரட்டுவதில் அனிமல் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் 14 மில்லியன் டாலரை இந்நிறுவனம் திரட்டி உள்ளது மற்றும் கடந்த ஜூலை 2021 நிலவரப்படி தோராயமாக 75 மில்லியன் டாலர் (565 கோடி) மதிப்பு கொண்ட நிறுவனமாக அனிமல் உருவெடுத்துள்ளது.
டாபிக்ஸ்