HT Tech SPL: செல்லப் பிராணிக்கு பயிற்சி அளிக்க உதவும் செயலி
Dec 25, 2023, 09:14 AM IST
Dog Whistle என்ற செயலியைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு செயலியிலும் பல வசதிகள் உள்ளன. Anti Dog Bark sounds வசதி குறித்து பார்க்கலாம்.
இதுவரை பல பயனுள்ள செயலிகள் குறித்து நாம் இந்தத் தொடரில் அறிந்து கொண்டு வந்திருக்கிறோம். இந்த எபிசோடில் மேலும் ஒரு அவசியமான பயனுள்ள செயலியைப் பார்ப்போம்.
பொதுவாகவே நாய்களை பார்த்து அச்சம் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகம். அதிலும் இரவு நேர ஷிஃப்ட் முடிந்து வீடு திரும்புபவர்கள், கடைகளுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புபவர்கள் நாய்களை கடந்துதான் வீடுகளுக்கு வர வேண்டியது இருக்கும்.
ஒரு தெரு வழியாக நாம் வழக்கமாக வருபவர்கள் என்றால் அந்தத் தெருவில் உள்ள நாய்கள் நம்மை பார்த்து குரைக்காது. நம்மை அது அடையாளம் கண்டுபிடித்துவிடும். இவர் வழக்கமாக வருபவர்தான் என்று புரிந்துகொண்டுவிடும்.
ஆனால், புது இடத்துக்கு செல்லும்போது அங்கிருக்கும் நாய்களுக்கு நாம் புதியவர்கள் தான். அதனால், அது நம்மைப் பார்த்து குரைக்கத் தொடங்கிவிடும். அதேபோல், ஏடிஎம், பெரிய பெரிய வீடுகளில் பாதுகாவலர்களாக இருப்பவர்களுக்கு நாய்கள் தொல்லை பெரும் பிரச்னையாக இருக்கும்.
அவர்களுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். வாருங்கள் அந்தச் செயலி என்ன என்று கூறுகிறேன்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் dog training app என்று டைப் செய்தால் ஏகப்பட்ட செயலிகள் வருகின்றன. உங்களுக்கு பிடித்த எந்த செயலியை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Dog Whistle என்ற செயலியைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு செயலியிலும் பல வசதிகள் உள்ளன. Anti Dog Bark sounds வசதி குறித்து பார்க்கலாம்.
செயலியை திறந்தவுடன் sound அல்லது dog Whistle என்ற ஆப்ஷன் வருகிறது. anti dog, anti rat, anti cat, anti insect என்று பல ஆப்ஷன்கள் உள்ளன. நாய், எலி, பூனை, பூச்சி ஆகியவற்றை விரட்டுவதற்குதான் இந்த ஆப்ஷன்களை பயன்படுத்தலாம்.
நாயை விரட்ட வேண்டுமென்றால் anti dog ஐ தேர்வு செய்து அதற்கு கீழே இருக்கும் frequency ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் நீங்கள் அலைவரிசை (frequency) எவ்வளவு வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.
அதற்கு கீழே வால்யூம் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. வால்யூமை நீங்கள் 100 வரை அதிகரித்துக் கொள்ள முடியும். பின்னர் ப்ளே பட்டனை அழுத்தினால் நாம் தேர்வு செய்த அலைவரிசை நாயின் காதுகளுக்கு சென்று அவை குரைப்பதை நிறுத்திவிடும்.
இதை பயன்படுத்தி நாய்களுக்கு பயிற்சியும் அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாய் மட்டுமல்லாமால், பூனை, எலி, பூச்சிகளையும் இந்த அலைவரிசைகளை கொண்டு நாம் அவற்றை விரட்ட முடியும். இதனால், அந்த ஜீவன்களுக்கும் எந்த பாதிப்பும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அலைவரிசை ஒலிகளை மனிதர்களைக் காட்டிலும் நாய்களும், பூனைகளும் கூர்ந்து கேட்கும் திறன் கொண்டவை.
இதைப் பார்த்து பயந்து அவை சப்தம் எழுப்பாமல் அடங்கிவிடுகிறது. பல வீடுகளில் நாய்களை பாதுகாப்புக்காக வளர்ப்பார்கள். நாய் வளர்ப்பவர்கள் வீடுகளில் தீயவர்கள் இந்த செயலியை பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் எச்சரிக்கையாக இருந்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.
Puppr-dog traning & Tricks செயலியில் செல்லப்பிராணிக்கு எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. அதையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
டாபிக்ஸ்