தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Tech Spl: அடல் பென்ஷன் யோஜனா கணக்கை நிர்வகிக்க உதவும் செயலி!

HT Tech SPL: அடல் பென்ஷன் யோஜனா கணக்கை நிர்வகிக்க உதவும் செயலி!

Manigandan K T HT Tamil

Dec 25, 2023, 09:22 AM IST

google News
சந்தாதாரர்களின் பங்களிப்புகளைப் பொறுத்து இந்தத் தொகை மாறும். இந்திய குடிமக்களில் 18-40 வயதுக்கு உள்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். (google play store)
சந்தாதாரர்களின் பங்களிப்புகளைப் பொறுத்து இந்தத் தொகை மாறும். இந்திய குடிமக்களில் 18-40 வயதுக்கு உள்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

சந்தாதாரர்களின் பங்களிப்புகளைப் பொறுத்து இந்தத் தொகை மாறும். இந்திய குடிமக்களில் 18-40 வயதுக்கு உள்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

ஓய்வூதியம் என்பது மூத்த குடிமக்கள் ஆன பிறகு அவர்கள் இனி சம்பாதிக்காத போது மாத வருமானத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.

இந்தியக் குடிமக்களுக்கு ஓய்வூதியத் திட்டமான அடல் பென்ஷன் யோஜனா (APY) இதில் கவனம் செலுத்துகிறது.

அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ், உத்தரவாதமான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 1,000/- அல்லது 2,000/- அல்லது 3,000/- அல்லது 4,000 அல்லது 5,000/- வழங்கப்படும்.

சந்தாதாரர்களின் பங்களிப்புகளைப் பொறுத்து இந்தத் தொகை மாறும். இந்திய குடிமக்களில் 18-40 வயதுக்கு உள்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

வங்கி சேமிப்பு கணக்கு/தபால் அலுவலக சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். இதற்கு ஆதார் கட்டாயம் அல்ல.

தனிநபரின் சேமிப்பு வங்கிக் கணக்கு இருக்கும் வங்கிக் கிளை/அஞ்சல் அலுவலகத்தை அணுகி இந்தத் திட்டத்தில் சேரலாம்.

மாதாந்திர / காலாண்டு / அரையாண்டு பங்களிப்பை தேர்வு செய்யலாம். தாமாகவே உங்கள் கணக்கில் இருந்து நீங்கள் தேர்வு செய்த ஓய்வூதியத்துக்கு ஏற்ப பிடித்தம் செய்யப்படும்.

நீங்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர்ந்து விட்டீர்கள் என்றால் அதை நிர்வகிக்க உதவும் செயலி குறித்துதான் இந்தப் பகுதியில் பார்க்கப் போகிறோம்.

புதிய APP ஆனது ஆன்லைனில் சந்தாதாரர்களின் கணக்கின் விவரங்களை வழங்குகிறது. சந்தாதாரர் பயனர் ஐடி (PRAN) மற்றும் வங்கி கணக்கு விவரங்களைப் பயன்படுத்தி சமீபத்திய கணக்கு விவரங்களை அணுகலாம். APP உங்கள் கணக்கு விவரங்களை ஆன்லைனில் அணுகி, உங்கள் கணக்குத் தகவலை அறிய உதவுகிறது. இது உங்கள் கணக்கு வைத்திருப்பதைப் பார்க்கவும், பரிவர்த்தனை அறிக்கையைப் பதிவிறக்கவும் மற்றும் உங்கள் கணக்கில் செய்யப்பட்ட சமீபத்திய பங்களிப்புகளைப் பார்க்கவும் உதவுகிறது.

இந்தச் செயலியை உங்கள் செல்போனில் பதிவிறக்கி PRAN Search-ஐ கிளிக் செய்து உங்கள் பெயர், வங்கிக் கணக்கு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டால் PDF டவுன்லோடு ஆகும். அதில் உங்கள் அடல் பென்ஷன் யோஜனா விவரங்கள் கிடைக்கும்.

இந்தச் செயலியில் உள்ள அம்சங்கள்

APY Services-ஐ கிளிக் செய்தால் புதிதாக விண்ணப்பிக்க, திருத்தம் செய்ய, இந்தக் கணக்கை மூட என அனைத்துக்கும் விண்ணப்பப் படிவம் கிடைக்கும். அதை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.

Help Desk பிரிவில் அழைத்தும் நீங்கள் பேசலாம்.

PRAN எண்ணை பயன்படுத்தி லாகின் செய்த பிறகு, அக்கவுண்ட் விவரங்கள், உங்கள் பங்களிப்பை அதிகரிக்க அல்லது குறைக்க, ஆதாரை இணைக்க, ஸ்டேட்மெண்ட்டை பார்க்க என பல ஆப்ஷன்கள் இருக்கின்றன.

இந்தச் செயலியை https://play.google.com/store/apps/details?id=nsdl.npslite லிங்க்கில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி