தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Tech Spl: தங்க நகைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உதவும் செயலி!

HT Tech SPL: தங்க நகைகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உதவும் செயலி!

Manigandan K T HT Tamil

Dec 25, 2023, 09:20 AM IST

google News
சில குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு இந்தியாவில் விற்கப்படுவதற்கு ISI முத்திரை கட்டாயமாகும். (googleplaystore)
சில குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு இந்தியாவில் விற்கப்படுவதற்கு ISI முத்திரை கட்டாயமாகும்.

சில குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு இந்தியாவில் விற்கப்படுவதற்கு ISI முத்திரை கட்டாயமாகும்.

ஸ்மார்ட்போன்களில் செயலிகள் நிரம்பி வழிகின்றன. அரிசி, பருப்பு வாங்குவது முதல் கார் வாங்குவது வரை செயலியில் செய்ய முடியும்.

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் நல்லது பல நடந்தாலும் ஏமாற்றுதலும் மோசடிகளும் நடந்த வண்ணமே இருந்து வருகிறது.

ISI முத்திரை என்பது 1950 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தொழில்துறை தயாரிப்புகளுக்கான தரநிலை-இணக்கக் குறியாகும். இந்தியாவின் தேசிய தரநிலை அமைப்பான Bureau of Indian Standards (BIS) உருவாக்கிய இந்திய தரநிலைக்கு (IS) ஒரு தயாரிப்பு இணங்குகிறது என்பதைச் சான்றளிக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் ஐஎஸ்ஐ முத்திரைதான் ஒரு தயாரிப்புக்கான உச்சபட்ச சான்றிதழாகும்.

சுவிட்சுகள், மின்சார மோட்டார்கள், வயரிங் கேபிள்கள், ஹீட்டர்கள், சமையலறை உபகரணங்கள் போன்ற பல மின் சாதனங்கள், எல்பிஜி வால்வுகள், எல்பிஜி போன்ற பிற தயாரிப்புகள் போன்ற சில குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு இந்தியாவில் விற்கப்படுவதற்கு ISI முத்திரை கட்டாயமாகும். சிலிண்டர்கள், வாகன டயர்கள், முதலியனவும் இதில் சேரும்.

90 தயாரிப்புகளுக்கு இந்த முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் போலி முத்திரையுடன் கூடிய தயாரிப்புகளும் விற்பனையாக வாய்ப்புள்ளது. தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள உதவும் செயலி தான் BIS Care செயலி.

இந்தச் செயலியை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

சிறப்பம்சங்கள்

  • ISI முத்திரையிடப்பட்ட பொருட்களின் நம்பகத்தன்மையை, ISI முத்திரைக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள CM/L எண்ணை உள்ளிடுவதன் மூலம் சரிபார்க்கலாம்.
  • மின்னணு பொருட்களின் நம்பகத்தன்மையை கட்டாய பதிவு திட்ட CRS முத்திரைக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள R எண்ணை உள்ளிடுவதன் மூலம் சரிபார்க்கவும்.
  • ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளின் நம்பகத்தன்மையை, 6 இலக்க HUID எண்ணை உள்ளிடுவதன் மூலம் சரிபார்க்கலாம்.
  • எந்தவொரு இந்திய தர நியமம் மற்றும் உரிமைதாரர்கள் பற்றி தகவல் பெறலாம்.
  • BIS ஆய்வகங்கள், இணைக்கப்பட்ட ஆய்வகங்கள் மற்றும் BIS ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் ஆகியவற்றின் விவரங்களை அவற்றின் அங்கீகரிக்கப்பட்ட நோக்கத்தைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளுடன் பெறவும்.
  • தரமற்ற பொருட்கள் மற்றும் போலியான BIS முத்திரை பயன்பாடு தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம்.

இந்தச் செயலியில் இத்தனை சிறப்பம்சங்கள் உள்ளன. உங்கள் செல்போன் அல்லது மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தி லாகின் செய்யலாம்.

 

செயலியின் அம்சங்கள்

இந்தச் செயலியை இன்ஸ்டால் செய்து கொள்வதற்கான லிங்க்..

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி