தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Tech Spl: எண்ணிலடங்கா மின் நூல்கள் ஒரே செயலியில்.. வாசகர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்!

HT Tech SPL: எண்ணிலடங்கா மின் நூல்கள் ஒரே செயலியில்.. வாசகர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்!

Manigandan K T HT Tamil

Dec 25, 2023, 09:22 AM IST

google News
புத்தகத்தில் படிப்பதை காட்டிலும் பல வசதிகளை கிண்டில் செயலி கொண்டிருக்கிறது. (googleplaystore)
புத்தகத்தில் படிப்பதை காட்டிலும் பல வசதிகளை கிண்டில் செயலி கொண்டிருக்கிறது.

புத்தகத்தில் படிப்பதை காட்டிலும் பல வசதிகளை கிண்டில் செயலி கொண்டிருக்கிறது.

டிஜிட்டலில் படிப்பதை எளிமையாக்கிய ஒரு செயலி பற்றி தான் பார்க்கப் போகிறோம். இன்றைய காலகட்டத்தில் எல்லோரிடமும் ஸ்மார்ட்போன் என்றழைக்கப்படும் அதிநவீன செல்போன் எல்லோரிடமும் உள்ளது.

எக்கச்சக்கமான தகவல்களை இந்த ஸ்மார்ட்போன் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் லட்சக்கணக்கான ஆப்கள் உள்ளன.

அனைத்தையும் நம்மால் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது சாத்தியம் அல்ல. பலருக்கு அதிக நினைவகம் (ஸ்டோரேஜ்) கொண்ட செல்போன் வாங்கும் அளவுக்கு வசதியும் இருப்பதில்லை.

அதனால், அதிமுக்கியமாக பயன்படும் அவசியமான செயலிகள் குறித்து இந்தத் தொடரில் உங்களுக்கு அறிமுகம் செய்து வருகிறேன்.

அந்த வகையில் புத்தகங்களை டிஜிட்டலில் படிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டதுதான் கிண்டில் ஆப். kindle தனியாக சாதனமாகவும் கிடைக்கிறது. இருப்பினும், விலை அதிகம் என்பதால் கிண்டில் சாதனத்தை அதிகம் பேரால் வாங்க முடிவதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்காக கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைப்பதுதான் kindle ஆப். இந்த செயலியை உங்கள் ஸ்மார்போனில் இன்ஸ்டால் செய்து இதில் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை படிக்கலாம்.

புத்தகங்கள் கட்டணம் செலுத்திதான் படிக்க முடியும். சில புத்தகங்கள் மிகக் குறைந்த விலைக்கும் கிடைக்கும். புத்தகங்களை ஆன்லைனில் நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்தி நீங்கள் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

கிண்டில் செயலி

புத்தகத்தில் படிப்பதை காட்டிலும் பல வசதிகளை கிண்டில் செயலி கொண்டிருக்கிறது.

புத்தகத்தில் படிப்பது போல் வராது என்றாலும் நிச்சயமாக உங்களுக்கு இந்த அனுபவம் புதுமையாக இருக்கும். அதேநேரம், சிலருக்கு புத்தகங்களைக் காட்டிலும் இதில் படிப்பது மிக வசதியாகவும் இருக்கும்.

இப்படி யோசித்துப் பாருங்கள். வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் புத்தகங்களை பராமரிப்பது என்பது மிகக் கடினம். ஆனால், ஒரு செயலியில் உங்களுக்காக ஒரு நூலகமே இருக்கிறது.

கிண்டில் செயலி புத்தகங்களை நேசிப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதம்!

இந்தச் செயலியை https://play.google.com/store/apps/details?id=com.amazon.kindle லிங்க்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி