HT Tech SPL: வேலை தேட உதவும் செயலிகள்!
Dec 25, 2023, 09:13 AM IST
Indeed, Naukri, shine,monster, linkedin ஆகிய செயலிகள் மிகவும் பிரபலமானவையாகும்.
நவீன காலத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினால் பலருக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும்.
கொரோனா தொற்று பரவலால் பலர் வேலையிழந்தனர். ஆனாலும், அவர்களில் பலர் வீட்டிலிருந்த படியே வேறு வேலைக்கு விண்ணப்பித்து வீட்டிலிருந்த படியே பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் உண்மைதான்.
அனைத்தும் டிஜிட்டல் ஆகி வரும் இந்த உலகத்தில், வேலைத் தேடுவதற்கும் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கும் ஏன் நேர்முகத் தேர்வும் கூட செயலிகள் வாயிலாகவே நடைபெறுகின்றன.
சரி வேலை தேடவும் வேலைக்கு விண்ணப்பிக்கவும் மிகவும் உதவிகரமாக இருக்கும் செயலிகளை பார்ப்போம்.
Indeed, Naukri, shine,monster, linkedin ஆகிய செயலிகள் மிகவும் பிரபலமானவையாகும்.
இந்தச் செயலிகளை நமது செல்போனில் டவுன்லோடு செய்து வைத்து ஒரு கணக்கை தொடங்கி வேலையைத் தேடலாம். இந்த செயலிகளை டவுன்லோடு செய்துகொண்ட பிறகு நமது மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நமது சுய விவரங்களை பூர்த்தி செய்யலாம்.
ஏற்கெனவே பணி அனுபவம் கொண்டிருப்பவர்கள் கடைசியாக எவ்வளவு சம்பளம் வாங்கினீர்கள், எத்தனை ஆண்டுகள் பணி அனுபவம் இருக்கிறது, உங்கள் திறமை என்ன? என்பது போன்ற பல விவரங்களை உள்ளீடு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் டாக்குமெண்டில் உள்ள நமது ரிஸியூமைக் கூட பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
அதன் பிறகு, நாம் விரும்பும் நிறுவனத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். நமது விண்ணப்பத்தை வேலை தரும் நிறுவனம் பார்த்துவிட்டதா, நமது மொபைல் எண்ணை பார்த்திருக்கிறதா என்பது போன்ற விவரங்கள் நமது மின்னஞ்சல் முகவரிக்கும் அவ்வப்போது notification-இல் வந்துகொண்டே இருக்கும்.
தனியுரிமை பாதுகாப்பு வசதிகளும் இந்த செயலிகளில் செய்யப்பட்டுள்ளன. இவை இணையதங்களாகவும் இருப்பதால் லேப்டாப், டெஸ்க்டாப்பில் கூட நீங்கள் அப்ளை செய்யலாம்.
லேப்டாப் இல்லாதவர்கள் தங்களது ஸ்மார்ட்போனிலேயே இந்தச் செயலிகளை பதிவிறக்கம் செய்து கொண்டு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்தச் செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. அப்றம் என்ன, இந்தச் செயலிகளை டவுன்லோடு பண்ணுங்க, வேலை தேட தொடங்குங்க!