தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Tech Spl: வரிசையில் நிற்க வேண்டாம்.. முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வாங்க உதவும் செயலி!

HT Tech SPL: வரிசையில் நிற்க வேண்டாம்.. முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வாங்க உதவும் செயலி!

Manigandan K T HT Tamil

Dec 25, 2023, 09:16 AM IST

google News
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை நமது மொபைல் போனில் சில நொடிகளில் பெற முடிவதே இந்தச் செயலியின் சிறப்பம்சம். (googleplaystore)
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை நமது மொபைல் போனில் சில நொடிகளில் பெற முடிவதே இந்தச் செயலியின் சிறப்பம்சம்.

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை நமது மொபைல் போனில் சில நொடிகளில் பெற முடிவதே இந்தச் செயலியின் சிறப்பம்சம்.

சென்னை போன்ற நகரங்களில் புறநகர் ரயில்களில் பயணிப்பவர்கள் அதிகgம். அவர்களில் பலர் UTS செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள். வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. ரயில் நிலையத்திற்கு குறிப்பிட்ட தொலைவுக்கு அருகில் இருந்து டிக்கெட்டை ஆன்லைனில் பெற்று பயணிக்கலாம்.

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை நமது மொபைல் போனில் சில நொடிகளில் பெற முடிவதே இந்தச் செயலியின் சிறப்பம்சம்.

இதுமட்டுமல்லாமல், நடைமேடை மற்றும் சீசன் டிக்கெட்டுகளையும் நாம் இந்தச் செயலியில் பெற முடியும்.

இந்தச் செயலி இந்திய ரயில்வே துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. வரிசையில் நிற்க வேண்டாம், ரொக்கமாக அளிக்க வேண்டியது இல்லை. வசதியான ஒன்று என்பதால் இந்தச் செயலி பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இன்ஸ்டால் ஆனதும் நமது விவரங்களை உள்ளிட வேண்டும். லாகின் செய்து நாம் பயன்படுத்தலாம்.

 R-Wallet அம்சமும் உள்ளது. இதில் நாம் பணத்தை ஆன்லைன் வழியாக மாற்றி இதில் சேமித்து வைத்து நமக்கு டிக்கெட் வாங்க தேவையான போது இதிலிருந்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

செல்போன் எண்ணை உள்ளிட்ட OTP-ஐ பதிவு செய்த பிறகே இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும். 

R-Wallet-ஐ ரீசார்ஜ் செய்வது எப்படி?

  • UTS செயலியில் R-Wallet ஐகானை அழுத்தவும்
  • ரீசார்ஜ் வாலெட்டை அழுத்தவும்
  • நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பும் தொகையை பதிவிடவும்
  • யுபிஐ, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தி தொகை செலுத்தவும்
  • இந்த செயல்முறைகள் முடிந்ததும் உங்கள் R-Wallet -க்கு பணம் வந்துவிடும்.

டிக்கெட்டை எப்படி முன்பதிவிடுவது?

  • பேப்பர்லெஸ் அல்லது பேப்பர் வகையைத் தேர்ந்தெடுக்கவும்
  • புறப்படும் இடம் அதாவது ரயில் நிலையம் மற்றும் சேரும் இடம் என்பதில் சென்றடைய விரும்பும் ரயில் நிலையம் தேர்வு செய்யுங்கள்
  • நெக்ஸ்ட்-ஐ அழுத்தி கெட் ஃபேர் என்பதை அழுத்தவும்
  • அடுத்து, புக் டிக்கெட்-ஐ அழுத்தியதும் R-Wallet-இல் உள்ள தொகை எடுக்கப்பட்டு டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்.
  • யுடிஎஸ் செயலியில் உள்ள ஷோ டிக்கெட்-ஐ அழுத்தி டிக்கெட்டை பார்க்கலாம். ஒருவேளை பேப்பர் டிக்கெட்டாக நீங்கள் தேர்வு செய்து இருப்பின் ரயில் நிலையத்தில் உள்ள ATVM/CoTVM கியாஸ்க்கில் பிரிண்ட் செய்து பெறலாம். அல்லது யுடிஎஸ் செயலியில் பதிவு செய்த புக்கிங் ஐடியை பொது டிக்கெட் கவுன்ட்டரில் காண்பித்து டிக்கெட்டை பெறலாம்.

வரிசையை தவிர்த்து சிரமமில்லாமல் Unreserved ரயில் டிக்கெட்டுகளை இந்தச் செயலியை பயன்படுத்தி பெற்று பயணியுங்கள்.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி