HT Tech SPL: நோட்ஸ் எடுத்துக் கொள்ள உதவும் பல அம்சங்கள் கொண்ட செயலி!
Jan 05, 2024, 06:00 AM IST
இதன் பெயர் Google Keep - notes and lists. கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இச்செயலியை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
முந்தைய தலைமுறை பாக்கெட்டில் டைரியும் பேனாவும் வைத்துக் கொண்டு இருப்பதை பார்த்திருப்போம். அது தொலைந்துவிடவும் வாய்ப்புகள் அதிகம். வாய்ஸ் ரெக்கார்டு செய்ய வேண்டும் என்றால் தனியாக ரெக்கார்டிங் கருவி வைத்திருப்பார்கள்.
குறிப்பாக காவல் துறை, பத்திரிகை துறையில் பணிபுரிபவர்களிடம் வாய்ஸ் ரெக்கார்டிங் கருவி இருக்கும்.
சரி விஷயத்துக்கு வருவோம். இன்று நாம் பார்க்கப் போகும் செயலிக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 2 பாராவுக்கு சம்பந்தம் உள்ளது.
ஆம், நீங்கள் இன்றைய காலகட்டத்தில் மேலே குறிப்பிட்டுள்ளபடி நோட்ஸ் எடுக்க டைரி, வாய்ஸ் ரெக்கார்டு செய்ய ரெக்கார்டிங் கருவி இதையெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அது தான் ஸ்மார்ட்போன் வந்தாச்சே!
அந்த ஸ்மார்ட்போனையும் இப்போது ஆள்வது செயலிகள் தான். பெரும்பாலான வேலைகளை செயலிகளில் இருந்து நம்மால் செய்து கொள்ள முடியும் தொழில்நுட்பம் நமக்கு அளித்த வரப்பிரசாதம்.
அந்த வகையில் இந்தத் தொடரில் நாம் இதுவரை பார்த்து வந்த செயலிகளை போலவே இந்தச் செயலியும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதன் பெயர் Google Keep - notes and lists. கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இச்செயலியை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
உங்கள் மனதில் ஒன்று தோன்றுகிறது. அதை விரைவாகப் போட்டோ எடுத்தோ அல்லது வாய்ஸில் பதிவு செய்தோ, இந்தச் செயலியில் நீங்கள் லிஸ்ட் செய்து வைத்துக் கொள்ளலாம். சரியான நேரத்தில் நினைவூட்டலைப் பெற இந்தச் செயலி உங்களுக்கு உதவும்.
பயணத்தின்போது குரல் குறிப்பைப் பேசவும், அதைத் தானாகப் படியெடுக்கவும் இந்தச் செயலி உங்களுக்கு உதவுகிறது. போஸ்டர், ரசீது அல்லது டாக்குமென்ட்டை புகைப்படத்தை எடுத்து, எளிதாக ஒழுங்கமைக்கவும் அல்லது தேடலில் பின்னர் கண்டுபிடிக்கவும் இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு லிஸ்ட்டை உருவாக்கி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வதை Google Keep எளிதாக்குகிறது.
வசதிகள்
- இதில் நீங்கள் டைப் செய்யும்போது Auto Save வசதி உள்ளது
- இமேஜ் வைத்து நோட்ஸ் உருவாக்க முடியும்
- வாய்ஸை பதிவு செய்து நோட்ஸ் உருவாக்க முடியும்
- Drawing செய்தும் நோட்ஸ் எடுத்துக் கொள்ள முடியும்
- எடுத்து வைத்துள்ள நோட்ஸை இமெயில், வாட்ஸ்அப் என அனைத்திலும் ஷேர் செய்யும் வசதியும் உள்ளது
- Reminder ஆகவும் வைத்து நினைவூட்டலைப் பெறலாம்
- ஒவ்வொரு நோட்ஸுக்கும் தனித்தனி கலர் கொடுக்கலாம்
- போட்டோவில் இருக்கும் எழுத்துக்களை புரிந்து கொண்டு அப்படியே பிரதி எடுக்கும் Grab Image Text ஆப்ஷனையும் பயன்படுத்தலாம்
- லேபிள் ஆப்ஷனும் உள்ளது. நிறைய நோட்ஸ் வைத்திருக்கும்போது குறிப்பிட்ட நோட்ஸை எடுக்க உங்களுக்கு இது எளிதாக இருக்கும்
- collaborators ஆப்ஷனை பயன்படுத்தி பிற இமெயில் பயனரையும் உங்கள் நோட்ஸில் எடிட் செய்ய வைக்கலாம்
டாபிக்ஸ்