தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Tech Spl: எங்கே மழை, எங்கே புயல்.. இந்த செயலி இருந்தா ஈஸியா தெரிஞ்சிக்கலாம்!

HT Tech SPL: எங்கே மழை, எங்கே புயல்.. இந்த செயலி இருந்தா ஈஸியா தெரிஞ்சிக்கலாம்!

Manigandan K T HT Tamil

Dec 25, 2023, 09:16 AM IST

google News
இந்தியாவின் எந்த நகரத்திலும் தற்போதைய வானிலை நிலவரத்தை இந்த ஒரு செயலி உங்கள் போனில் இருந்தால் நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். (googleplaystore)
இந்தியாவின் எந்த நகரத்திலும் தற்போதைய வானிலை நிலவரத்தை இந்த ஒரு செயலி உங்கள் போனில் இருந்தால் நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவின் எந்த நகரத்திலும் தற்போதைய வானிலை நிலவரத்தை இந்த ஒரு செயலி உங்கள் போனில் இருந்தால் நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

MAUSAM என்பது இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD), புவி அறிவியல் அமைச்சகத்தின் (MoES) ஒரு மொபைல் செயலி ஆகும், இது https://mausam.imd.gov.in/ இல் கிடைக்கும் வானிலை உள்ளடக்கங்களுக்குத் தடையற்ற மற்றும் பயனர் நட்பு அணுகலை இந்தச் செயலி வழங்குகிறது. பயனர்கள் வானிலை, முன்னறிவிப்புகள், ரேடார் படங்களை இந்தச் செயலியில் காணலாம்.

வரவிருக்கும் வானிலை நிகழ்வுகள் குறித்து முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கையுடன் இரு்ககலாம். MoES இன் மான்சூன் மிஷன் திட்டத்தின் கீழ் ICRISAT இன் டிஜிட்டல் அக்ரிகல்ச்சர் & யூத் (DAY) குழு மற்றும் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM) இணைந்து இந்தச் செயலியின் மேம்பாட்டை நிர்வகிக்கிறது.

இந்தியாவின் எந்த நகரத்திலும் தற்போதைய வானிலை நிலவரத்தை இந்த ஒரு செயலி உங்கள் போனில் இருந்தால் நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

துல்லியமான வானிலை தகவல்

மெளசம் செயலியில் துல்லியமான வானிலை தகவல்களை நீங்கள் பெறலாம். வெவ்வேறு வானிலை நிலைகளுடன் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை குறித்த தகவல்கள், ஒரு வாரத்திற்கு தேவையான வானிலை நிலவரம் ஆகியவற்றை இந்தச் செயலியில் நீங்கள் பெறலாம்.

இந்தச் செயலியை பயன்படுத்த உங்கள் இருப்பிடத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்மூலம், நீங்கள் உங்கள் இருப்பிடத்தை சுற்றி வானிலை நிலவரத்தை நீங்கள் விரல் நுனியில் பெற முடியும்.

ஈரப்பதம், காற்று, மழைப்பொழிவு, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், சந்திர உதயம் போன்ற பிற தொடர்புடைய தகவல்களை நீங்கள் பெற முடியும்.

நீங்கள் எப்போதும் அணுக விரும்பும் உங்களுக்குப் பிடித்த இடங்களை இப்போது நிர்வகிப்பது சிரமம் இல்லாமல் இருக்கும்.

அவற்றை உங்கள் பட்டியலில் சேர்த்து, எந்த நேரத்திலும் எங்கும் புதுப்பித்த நிலையில் நீங்கள் இருக்க முடியும். இந்தச் செயலி மூலம் அனைத்து வானிலை விவரங்களையும் விரல் நுனியில் வைத்துக் கொள்ள முடியும் என்பதால், கடுமையான மழை, புயல், பிற கடினமான சூழ்நிலைகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Warning-ஐ க்ளிக் செய்தால் இந்தியாவி் எங்கு தற்போது புயல், மழை பாதிப்பு இருக்கிறது என்பதை அறியலாம். மிகவும் கனமழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும், புயல், இடியுடன் கூடிய மழை இருக்கும் என்றாலும் சிவப்பு நிறத்தல் கட்டம் போடப்பட்டிருக்கும்.

இதனால், அங்கு இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அர்த்தம். பச்சை நிறத்தல் கட்டம் போடப்பட்டிருந்தால் வானிலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என அர்த்தம் கொள்ளலாம்.

Cyclone-ஐ க்ளிக் செய்தால் இந்திய வரைப்படத்தில் எங்கு புயல் எச்சரிக்கை இருக்கிறது என்பதை அறியலாம். National Bulletin-ஐ க்ளிக் செய்தால் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு கிடைக்கும்.

ஆங்கிலம், தமிழ், மலையாளம் உள்பட 13 மொழிகளில் இந்தச் செயலியை நீங்கள் பயன்படுத்த முடியும்.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி