தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Tech Spl: தையல் கலையை ஈஸியா இந்தச் செயலியிலேயே கத்துக்கலாம்!

HT Tech SPL: தையல் கலையை ஈஸியா இந்தச் செயலியிலேயே கத்துக்கலாம்!

Manigandan K T HT Tamil

Dec 25, 2023, 09:14 AM IST

google News
ரெடிமேட் டிரெஸ்களை வாங்காமல் துணி மட்டும் வாங்கி தையல்காரரிடம் கொடுத்து சரியான அளவெடுத்து தைத்துக் கொண்டு அந்த ஆடையை உடுத்துபவர்களின் எண்ணிக்கை இங்கே அதிகம். (google play store)
ரெடிமேட் டிரெஸ்களை வாங்காமல் துணி மட்டும் வாங்கி தையல்காரரிடம் கொடுத்து சரியான அளவெடுத்து தைத்துக் கொண்டு அந்த ஆடையை உடுத்துபவர்களின் எண்ணிக்கை இங்கே அதிகம்.

ரெடிமேட் டிரெஸ்களை வாங்காமல் துணி மட்டும் வாங்கி தையல்காரரிடம் கொடுத்து சரியான அளவெடுத்து தைத்துக் கொண்டு அந்த ஆடையை உடுத்துபவர்களின் எண்ணிக்கை இங்கே அதிகம்.

தையல் கடை இல்லாத ஊரை விரல் விட்டு எண்ணிவிடலாம். ரெடிமேட் ஆடைகள் வாங்கும் காலம் வந்துவிட்டாலும் ஊருக்கு ஊர் டெக்ஸ்டைல்ஸ் இருந்தாலும் இன்னமும் தையல்கடைகளுக்கு மவுஸ் குறையாமல் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. பெரியவர்கள் தைத்துக் கொள்கிறார்களோ இல்லையோ, பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு யூனிஃபார்மை இன்றளவும் துணியெடுத்து தையல்காரரிடம் தைத்து பிள்ளைகளுக்கு கச்சிதமாக போட்டுவிடும் பெற்றோர் பலர் இங்கு உள்ளனர்.

ரெடிமேட் டிரெஸ்களை வாங்காமல் துணி மட்டும் வாங்கி தையல்காரரிடம் கொடுத்து சரியான அளவெடுத்து தைத்துக் கொண்டு அந்த ஆடையை உடுத்துபவர்களின் எண்ணிக்கை இங்கே அதிகம்.

நீங்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது முடிந்தால் தையல் கடை ஏதாவது இருந்தால் வெளியிலிருந்தே கூட பாருங்கள். இரண்டு முதல் மூன்று பேர் வரை காலையிலிருந்து இரவு வரை பணிபுரிந்து கொண்டிருப்பார்கள்.

ஆண்களுக்கான சட்டை, பேன்ட் தைக்கும் கடைகளில் தைக்கப்பட்ட சட்டைகளை கடைகளில் கிளிப் மாட்டி தொங்கவிட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

ஏன் இதை குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் தையல் கடை நடத்தி ஒரு குடும்பத்தை இங்கே நடத்த முடியும் என்பது 100 சதவீதம் உண்மை. அந்த அளவுக்கு லாபம் தரக் கூடிய தொழில் இது. அதிலும் பெண்களுக்கு பிளவுஸ் தைப்பவர்களுக்கு என்றுமே தேவை இருந்து கொண்டே இருக்கும்.

அதிலும் குறிப்பாக இளம்பெண்கள் டிசைன் டிசைனாக பிளவுஸ் தைத்து போட்டுக் கொள்ளவே விரும்புகிறார்கள். அத்துடன், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலும் இளம்பெண்கள் சுடிதார் அணியும் பழக்கம் கொண்டவர்கள்.

துணி வாங்கி அதை தைத்துப் போட்டுக் கொள்ளும் பெண்களே அதிகம். ஒரு தையல் இயந்திரம் வாங்கி வீட்டிலேயே கூட நீங்கள் பிளவுஸ் தைத்துக் கொடுத்து சம்பாதிக்கலாம். சரி, அதற்கு முதலில் தையல் கலையை அறிந்து கொண்டிருக்க வேண்டுமல்லவா?

பல நகரங்களில் தையல் கலையை கற்பிக்கும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.

15 நாட்கள் அல்லது ஒரு மாதத்தில் சுடிதார் தைக்கவும், பிளவுஸ் தைக்கவும் கற்றுத் தருகிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் அல்லது குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பவர்கள் வீட்டிலேயே தைக்க கற்றுக் கொள்ளலாம்.

அதற்கு உதவும் செயலி பற்றிதான் இந்தக் கட்டுரையில் குறிப்பிட இருக்கிறேன். இந்தச் செயலியின் பெயர் how to learn tailoring and dress cutting in tamil.

இந்தச் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.

இதை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து நீங்கள் பயன்படுத்தலாம். முழுவதும் தமிழில் கற்றுக் கொடுக்கிறார்கள். வீடியோக்கள் மூலம் கற்றுக் கொடுப்பதால் நேரில் நீங்கள் பயிற்சி பெறுவதை போன்று உணர்வீர்கள்.

செயலியைத் திறந்ததவுடன் புதிய வீடியோ என்ற பிரிவில், புதிதாக சமீபத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் உள்ளன.

அடுத்ததாக வகைகள் என்ற பிரிவில் சட்டை, தையல், பிளவுஸ், சுடிதார், பேன்ட், பேன்டிஸ், பிளவுஸ் டிசைன், பாவாடை, எம்பிராய்டிங் டிசைன், தையல் மிஷின் சர்வீஸ், நைட்டி, பெட்டிக்கோட், டாப் என பல உட்பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரிவுகளில் உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் தேர்வு செய்து கற்றுக் கொள்ளலாம்.

முதல் முறையாக தையல் கலையைக் கற்றுக் கொள்பவர்கள் என்றால் தையல் என்ற பிரிவைத் தேர்வு செய்து அதிலுள்ள வீடியோக்களைப் பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.

டெய்லரிங் டூல்ஸ் பிரிவில் எந்த வகையான கருவிகள் எல்லாம் நீங்கள் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய வீடியோ உள்ளது.

இல்லத்தரசிகளுக்கும் சுயதொழில் செய்து சாதிக்க நினைப்பவர்களுக்கும் நிச்சயம் இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி