தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Tech Spl: முதலுதவி பண்ண கத்துக்கணுமா.. இந்தச் செயலியை இன்ஸ்டால் பண்ணுங்க!

HT Tech SPL: முதலுதவி பண்ண கத்துக்கணுமா.. இந்தச் செயலியை இன்ஸ்டால் பண்ணுங்க!

Manigandan K T HT Tamil

Dec 25, 2023, 09:16 AM IST

google News
அவசரக் காலங்களில் எப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. (googleplaystore)
அவசரக் காலங்களில் எப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அவசரக் காலங்களில் எப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

மிகவும் பயனுள்ள ஒரு செயலி குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள முதலுதவி ஆப் குறித்து தகவலைதான் இத்தொடரில் பகிர இருக்கிறேன்.

Indian Red Cross First Aid என நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ளீடு செய்து இந்த ஆப்பை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் Install செய்து கொள்ளலாம்.

அவசரக் காலங்களில் எப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

உதாரணத்துக்கு விபத்தில் விரல் துண்டாகிவிட்டால் என்ன செய்ய வேண்டும், தீவிபத்தில் சிக்கியவர்களுக்கு, ஆஸ்துமாவால் மூச்சு விட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு, மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு, மூக்கில் திடீரென ரத்தம் வருபவர்களுக்கு என இவர்களுக்கு எல்லாம் என்ன செய்ய வேண்டும், எலும்பு முறிவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், விஷம் அருந்தியவர்களுக்கு எப்படி முதலுதவி அளிக்க வேண்டும் என்பது போன்ற விவரங்கள் இந்த செயலியில் இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்தும் அடிப்படையாக தெரிந்து வைத்துக் கொள்வதற்காக மட்டுமே. நீங்கள் விரும்பினால் முதலுதவி செய்வதை முறையாக தெரிந்துகொள்ளவும் படிக்கலாம். அதுதொடர்பான விவரங்களும் First aid training என்ற பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

அவசரகால அழைப்பு எண்ணை ஒரே கிளிக்கில் செயல்படுத்தவும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, உங்கள் இருப்பிடத்தை சுற்றியிருக்கும் மருத்துவமனை விவரங்களை தெரிந்துகொள்ளவும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

hospital என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்களது தற்போதைய லொக்கேஷனை பயன்படுத்திக் கொள்ள செயலிக்கு அனுமதி கொடுத்தீர்கள் என்றால் மருத்துவமனை விவரங்கள் வரைப்படத்தில் காட்டும்.

செயலியின் அம்சங்கள்

இதுதவிர, விபத்தில் சிக்கியவர்களை காப்பற்ற முயிற்சி செய்பவர்களுக்காக இருக்கும் சட்டப் பாதுகாப்பு குறித்த விவரங்கள் Laws and First aid என்ற பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

பயனுள்ள இந்தச் செயலி அனைவரும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.
அடுத்த செய்தி