Himachal Pradesh Rain : வட மாநிலங்களில் கடும் மழை – இமாச்சலில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
Jul 09, 2023, 01:07 PM IST
South West Monsoon at Himachalpradesh : இமாச்சல பிரதேசத்தின் லாஹீல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு, பனிச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாநிலத்தில் வெள்ளம், மண்சரிவு பாறை சரிவு ஆகியவை ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம், லாஹீல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் பனிச்சரிவு, நிலச்சரிவு ஆகியவை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
லாஹீல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் கன மழைப்பொழிவால், அங்கு கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் பனிச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
இந்த மாநிலத்தில் 7 மாவட்டங்களுக்கு நேற்று சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது. மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்டும் அடுத்த 48 மணி நேரத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தில் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பாறை சரிவு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கேரா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக மண்புராவையும், நலங்காரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 105ல் சித்தார்த்தா தொழிற்சாலை அருகே மரங்கள் விழுந்துள்ளதால் சாலைகள் அடைக்கப்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இமாச்சல் பிரதேசத்தின் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. தொடர்ந்து அந்த நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து சீரானது.
மாநில தலைநகர் சிம்லாவில், கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து கொட்டி, சன்வாரா இடையேயான ரயில்வே டிரக் மூடப்பட்டது.
கொட்டி ரயில் நிலையத்துக்கும், சன்வாரா ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள ரயில் பாதை, மழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து மூடப்பட்டது என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீன் 24ம் தேதி முதல் இமாச்சல பிரதேசத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. மாநிலம் ஏற்கனவே இந்த மழையால் உட்கட்டமைப்பு வசதிகளை கடுமையாக இழந்துள்ளது என்று அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்