Himachal Pradesh Assembly Elections 2022: இமாச்சலில் ஆட்சி அமைக்கப்போவது யார்?
Dec 05, 2022, 02:09 PM IST
Himachal Pradesh Assembly Elections 2022: இதற்கிடையில் இரண்டு மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், இன்று மாலை வெளியாகின்றன.
இரண்டு கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்ட குஜராத்தியில் ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் முடிவுகள் நிறைவு பெற்று, இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலையிலிருந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதற்கிடையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்னை போட்டி அங்கு நிலவும் நிலையில், மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆட்சி அமைக்க, 92 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதன் அடிப்படையில் அங்கு பலப்பரிட்சை நிலவுகிறது.
இது ஒருபுறமிருக்க, இமாச்சல பிரதேசத்தில்ஒரே கட்டமாக கடந்த நவம்பர் 12 ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அங்கு 75.6 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், யார் அங்கு வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 35 இடங்களில் வெற்றி பெறும் கட்சியே அங்கு ஆட்சி அமைக்க முடியும். முன்கூட்டியே தேர்தல் நிறைவு பெற்றதாலும், முடிவுகள் குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் டிசம்பர் 8 ம் தேதி தான் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் இரண்டு மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், இன்று மாலை வெளியாகின்றன. இந்தியாவின் முன்னணி ஊடகங்கள், பிரபல அரசியல் பின்தொடர்பு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள், இன்று மாலை 6 மணியிலிருந்து வெளியாகும் என தெரிகிறது.